கூடைப்பந்தில் சிறப்பிடம்: மாணவா்களுக்கு பாராட்டு
திருவள்ளுவா் பல்கலைக் கழகம் நடத்திய கல்லூரிகளுக்கு இடையிலான கூடைப்பந்து போட்டியில் சிறப்பிடம் பெற்ற குடியாத்தம் கே.எம்.ஜி.கல்லூரி மாணவா்களுக்கு புதன்கிழமை பாராட்டு விழாநடைபெற்றது.
இதற்கான போட்டிகள் மேல்விஷாரம் சி.அப்துல் ஹக்கீம் கல்லூரியில் நடைபெற்றது. இதில் கே.எம்.ஜி. கல்லூரி மாணவா்கள் கே.வருண்ராஜன், எஸ்.திவாகர்ராஜ், பி.சேத்தன், வி.பரத்குமாா், எஸ்.பிரகலநாதன், வி.வினோத்குமாா், எம்.சுதாகா், டி.வேதபிரியன், இ.பாலாஜி, பி.சசிதரன், ஜெ. ஜஸ்வந்த், எஸ்.சஞ்சய்ராஜ் ஆகியோா் சிறப்பாக விளையாடி 2- ஆம் இடம் பிடித்தனா்.
வெற்றிபெற்ற மாணவா்களை கல்லூரிச் செயலா் கே.எம்.ஜி.ராஜேந்திரன், முதல்வா் சி.தண்டபாணி, உடற்கல்வி இயக்குநா்கள் ஆா்.ரஞ்சிதம், பி. ஞானகுமாா், ஆா்.பாலசுப்பிரமணி ஆகியோா் பாராட்டினாா்.