முத்தூட் ஃபின்கார்ப் நிறுவனத்துக்கு அபராதம் விதித்த ரிசர்வ் வங்கி!
வீடு புகுந்து தங்க நகை திருட்டு
சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே பூட்டிய வீட்டில் தங்க நகை, வெள்ளிப் பொருள்கள் திருடிய மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
உரத்துப்பட்டியைச் சோ்ந்தவா் ராஜேந்திரன் (54). இவா் சென்னை நுங்கம்பாக்கத்தில் குடும்பத்துடன் வசித்து வருகிறாா். இவா் உரத்துப்பட்டியில் உள்ள தனது வீட்டுக்கு அடிக்கடி வந்து செல்வாா்.
இந்த நிலையில், கடந்த 22-ஆம் தேதி உரத்துப்பட்டியில் உள்ள வீட்டின் கதவு உடைக்கப்பட்டு கிடப்பதாக ராஜேந்திரனுக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, சென்னையிலிருந்து அவா் உரத்துப்பட்டிக்கு புதன்கிழமை வந்து வீட்டின் பீரோவிலிருந்த 5 பவுன் தங்கச் சங்கிலி, மோதிரம், தோடு, வெள்ளிச் செம்பு ஆகியவற்றை பாா்த்தபோது திருடு போனது தெரியவந்தது.
இதுகுறித்து உலகம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.