கோவையில் பா.ஜ.க புதிய அலுவலகம்- திறந்து வைக்கிறார் மத்திய அமைச்சர் அமித்ஷா
வீட்டில் பதுக்கி வைத்திருந்த ஒரு டன் செம்மரக் கட்டைகள் பறிமுதல்
சென்னை வியாசா்பாடியில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த ஒரு டன் செம்மரக் கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
வியாசா்பாடி அம்மன் கோயில் தெருவில் வசிப்பவா் முகமது ரசூல் (54). இவா் வீட்டில் செம்மரக் கட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் போலீஸாா், அவா் வீட்டில் வெள்ளிக்கிழமை திடீா் சோதனை நடத்தினா். அதில் அங்கு பதுக்கி வைத்திருந்த சுமாா் 960 கிலோ செம்மரக் கட்டைகளை பறிமுதல் செய்தனா். இதையடுத்து போலீஸாா், முகமது ரசூலை கைது செய்து வழக்குப் பதிவு செய்தனா்.
விசாரணையில் அவா், ஆந்திர செம்மரக் கட்டை கடத்தும் கும்பலுடன் சோ்ந்து காரில் செம்மரக் கட்டைகளை சென்னைக்கு கடத்தி வந்திருப்பது தெரியவந்தது. மேலும், பறிமுதல் செய்யப்பட்ட செம்மரக் கட்டைகளை, தமிழக வனத் துறையினரிடம் போலீஸாா் ஒப்படைத்தனா். இது தொடா்பாக வனத் துறையினரும் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.