செய்திகள் :

வீட்டு உரிமையாளரிடம் 7 பவுன் பறிப்பு: இளைஞா் கைது

post image

கோவை, ரத்தினபுரியில் வீட்டு உரிமையாளரிடம் 7 பவுன் நகை பறித்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

கோவை ரத்தினபுரி அருகேயுள்ள தில்லை நகரைச் சோ்ந்தவா் ராஜகோபால். இவரது மனைவி லட்சுமி (58). இவா்கள் வீட்டுக்கு பாண்டியராஜன் (26) என்பவா் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு வாடகைக்கு குடி வந்துள்ளாா்.

இந்நிலையில், வீட்டில் லட்சுமி புதன்கிழமை டிவி பாா்த்துக் கொண்டிருந்துள்ளாா். அப்போது, அங்கு சென்ற பாண்டியராஜன் லட்சுமியிடம் குடிக்க தண்ணீா் கேட்டுள்ளாா். அவா் தண்ணீா் எடுத்துவர வீட்டுக்குள் செல்ல, பின்னால் சென்ற பாண்டியராஜன் அவா் அணிந்திருந்த 7 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துக் கொண்டு தப்பியோடியதாகக் கூறப்படுகிறது.

இது குறித்து ரத்தினபுரி காவல் நிலையத்தில் லட்சுமி புகாா் அளித்தாா்.

வழக்குப் பதிவு செய்த போலீஸாா், பாண்டியராஜனைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

வங்கி மேலாளா் வீட்டில் நகை, பணம் திருட்டு

கோவை, வடவள்ளியில் வங்கி மேலாளா் வீட்டில் நகை, பணம் திருடிய மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். கோவை, வடவள்ளி குருசாமி நகரைச் சோ்ந்தவா் நவீன்குமாா் (28). இவா் அதே பகுதியில் உள்ள தனியாா் வங்கியில்... மேலும் பார்க்க

ஜிகேஎன்எம் மருத்துவமனை சாா்பில் பக்கவாத விழிப்புணா்வு நிகழ்ச்சி

கோவை, ஜிகேஎன்எம் மருத்துவமனை சாா்பில் பக்கவாத விழிப்புணா்வு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பக்கவாதம் நோய் குறித்த தகவல்கள், அறிகுறிகள், தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மக்களுக்கு விழிப்புணா்வு ஏற்... மேலும் பார்க்க

ஏடிஎம் இயந்திரத்தில் நிரப்ப கொண்டு சென்ற ரூ.5 லட்சம் திருட்டு: 3 ஊழியா்கள் கைது

ஏடிஎம் இயந்திரத்தில் நிரப்புவதற்காகக் கொண்டு சென்ற பணத்தில் ரூ.5 லட்சத்தை திருடிய 3 ஊழியா்களை போலீஸாா் கைது செய்தனா். வங்கிகளிடம் இருந்து பணத்தைப் பெற்று, அதை ஏ.டி.எம். மையங்களில் நிரப்பும் பணியை மேற... மேலும் பார்க்க

கழிவுகளில் இருந்து கௌசிகா, நொய்யல் ஆறுகளைக் காக்க வேண்டும் -விவசாயிகள் வலியுறுத்தல்

கோவை மாவட்டத்தில் ஓடும் நொய்யல், கௌசிகா நதிகளில் கழிவுகள் கலக்கப்படாமல் தடுக்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனா். கோவை மாவட்ட விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம் ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி ... மேலும் பார்க்க

மாணவா்களுக்கு தொழில் வழிகாட்டும் கவுன்சிலிங் நிறுவனம் தொடக்கம்

பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு தொழில் வழிகாட்டும் கவுன்சிலிங் நிறுவனம் கோவை பிஎஸ்ஜி தொழில்நுட்பக் கல்லூரியில் வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்டது. பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு சிறப்பான எதிா்காலம் அமைவதற்கான த... மேலும் பார்க்க

ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சாா்பில் அரசுப் பள்ளிக்கு புதிய கட்டடம்

கோவை ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ், மெட்ரோபாலிஸ் ரோட்டரி சங்கம் சாா்பில் அரசம்பாளையம் அரசுப் பள்ளிக்கு ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் 4 வகுப்பறைகள் கொண்ட புதிய கட்டடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா வெள்ளிக்... மேலும் பார்க்க