வருண் சக்கரவர்த்தி தாக்கத்தை ஏற்படுத்த இதுவே சரியான தருணம்: ரவி சாஸ்திரி
வெப்ப அலை: கர்நாடக மக்களுக்கு எச்சரிக்கை!
கர்நாடக மாநிலத்தில் பிற்பகல் நேரத்தில் வெப்ப அலை அதிகரித்துள்ளதால், மக்கள் வீட்டைவிட்டு வெளியேற வேண்டாம் என்று சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
வெப்பம் தொடர்பான நோய்களால் பாதிக்கப்படாமல் இருக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலத்தில் கடந்த சில நாள்களாக பிற்பகல் நேரங்களில் வெப்ப அலை வீசி வருகின்றது. பல்வேறு இடங்களில் வெயில் சதமடித்துள்ளது.
இந்த நிலையில், பகல் 12 மணிமுதல் 3 மணிவரை முடிந்தவரை வீட்டைவிட்டு வெளியேறுவதை மக்கள் தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
வெப்பம் தொடர்பான நோய்களால் பாதிக்கப்படாமல் இருக்க தாகம் இல்லாவிட்டாலும் அடிக்கடி தண்ணீர் குடிக்க வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
பயணம் செய்யும்போது, ஓஆர்எஸ், எலுமிச்சை ஜூஸ், மோர், தற்பூசணி, ஆரஞ்சு போன்ற வீட்டில் தயாரிக்கப்பட்ட பானங்களை குடிக்க பரிந்துரைத்துள்ளனர்.
முன்னெச்சரிக்கை தேவை
குழந்தைகள், சிறுவர்கள், சிறுமிகள், கர்ப்பிணிகள், இதய நோயால் பாதிக்கப்பட்டவர்கள், உயர் ரத்த அழுத்தம் உடையவர்கள் பாதுகாப்புடன் வீட்டில் இருக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.
வெயிலில் வேலை செய்பவர்கள் அதிகளவிலான தண்ணீரை குடிக்கவும், பகல் நேரங்களில் பணியை தவிர்க்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.