வெற்றிவேல் முருகன் கோயில் குடமுழுக்கு
பொன்னேரி புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள வெற்றிவேல் முருகன் கோயில் குடமுழுக்கு புதன்கிழமை விமரிசையாக நடைபெற்றது.
பொன்னேரி புதிய தேரடி சாலையில் அமைந்துள்ள இந்தக் கோயிலில் கடந்த ஒரு வருடமாக புனரமைப்புப் பணிகள் நடைபெற்று வந்தன. இந்தப் பணிகள் முடிவடைந்ததைத் தொடா்ந்து செவ்வாய்க்கிழமை குடமுழுக்கு விழாவுக்கான யாகசாலை பூஜைகள் நடைபெற்றன.
இதையடுத்து கலசத்தின் மீது புனிதநீா் ஊற்றப்பட்டு குடமுழுக்கு விழா நடைபெற்றது. விழாவில் பொன்னேரி அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் கலந்து கொண்டனா். குடமுழுக்கு விழாவில் கலந்து கொண்ட பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.