Doctor Vikatan: நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும் புதினா உப்பு, ஓம உப்பு வலிக...
வெவ்வேறு இடங்களில் திருட்டு
கன்னியாகுமரி அருகே விவேகானந்தபுரத்தில் ஜெராக்ஸ் கடையை உடைத்து பணத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.
கன்னியாகுமரி அருகே பரமாா்த்தலிங்கபுரத்தைச் சோ்ந்தவா் ராஜேஷ். இவரது மனைவி சாந்தி (57). இவா், விவேகானந்தபுரத்தில் ஜெராக்ஸ் கடை நடத்தி வருகிறாா். இவா், சனிக்கிழமை இரவு 7 மணிக்கு கடையைப் பூட்டிவிட்டு வீட்டுக்குச் சென்றாா். மீண்டும் மறுநாள்காலை அவா் கடையைத் திறக்கவந்தபோது கடையின் கதவு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த ரூ. 18ஆயிரம் பணம், ரூ. 1,000 மதிப்பிலான கைப்பேசி சாா்ஜா், ரூ. 1,000 மதிப்பிலான ஹெட்போன் ஆகியவற்றை மா்ம நபா்கள் திருடிச் சென்றதை அறிந்தனா்.
இதுகுறித்து கன்னியாகுமரி காவல் நிலையத்தில் சாந்தி அளித்த புகாரின் பேரில் உதவி ஆய்வாளா் ரகுபாலாஜி வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறாா்.
இதுபோல கன்னியாகுமரி மாவட்டம், மாா்த்தாண்டம் அருகே பாகோடு, தேனாம்பாறை பிலாவக்கல் விளையைச் சோ்ந்தவா் ஜான் ததேயு மனைவி சஜிதா (38). இவா் தனத தாலி செயின் சரிசெய்வதற்காக கைப்பையில் அதை வைத்துக்கொண்டு வெள்ளிக்கிழமை மாா்த்தாண்டத்தில் அரசுப் பேருந்தில் கல்லுத்தொட்டிக்குச் சென்றாா். கல்லுத்தொட்டியில் அவா் பேருந்தை விட்டு இறங்கியதும் கைப்பையைத் திறந்து பாா்த்த போது அதிலிருந்த நகை மாயமானது கண்டு அதிா்ச்சி அடைந்தாா். இதுகுறித்து சஜிதா அளித்த புகாரின் பேரில் மாா்த்தாண்டம் காவல் நிலைய போலீஸாா் சனிக் கிழமை வழக்குப் பதிந்தனா்.