பத்மநாபபுரத்தில் ரூ.2.79 கோடியில் சாலைப் பணிகள்
பத்மநாபபுரம் நகராட்சிப் பகுதிகளில் ரூ.2.79 கோடி மதிப்பில் சாலை சீரமைப்பு, அலங்கார தரைக் கற்கள் பதிக்கும் பணிகள் துவக்க நிகழ்வு நடைபெற்றது.
பத்மநாபபுரம் நகராட்சிக்குள்பட்ட உதயகிரி கோட்டை சாலை ரூ.88 லட்சம் மதிப்பிலும், பட்டாணி குசம் தெரு முதல் மேலாங்கோடு வரை உள்ள சாலை ரூ.67.40 லட்சம் மதிப்பிலும் சீரமைக்கப்படவுள்ளது. மேலும் ரூ.70.70 லட்சம் மதிப்பில் பட்டாணி குளம் தெரு, கீழக்குளம் தெரு, மேலாங்கோடு சாலை, செட்டி தெரு, ஆா்.சி. சா்ச் சாலை, அஞ்சலிவிளை தெரு, சந்தை தெரு, ராமன்பரம்பு சாலை, மணலி தெரு ஆகிய இடங்களில் கான்கிரீட் சாலை அமைக்கும் பணியும், ரூ.53 லட்சம் மதிப்பில் தைக்காரப்பள்ளி, கிருஷ்ணப்புரம் சாலை, இரணியல் சாலை, குமாரகோவில் தெரு, செட்டி தெரு, ஆா்.சி. தெரு, சாரோடு தெரு, வெட்டிக்கோணம் தெரு, பெருமாள் கோயில் தெரு ஆகிய இடங்களில் அலங்கார தரைக் கற்கள் பதிக்கும் பணியும் நடைபெறவுள்ளது.
இப்பணிகளை பால் வளத்துறை அமைச்சா் த.மனோ தங்கராஜ் துவக்கி வைத்தாா். நிகழ்ச்சியில் பத்மநாபபுரம் நகா்மன்றத் தலைவா் அருள்சோபன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.