தஞ்சாவூர்: காற்று வீசியதில் அறுந்து விழுந்த மின்கம்பி, மின்சாரம் தாக்கி வயலில் த...
திருவட்டாறு அருகே மா்ம விலங்கு தாக்கியதில் 3 ஆடுகள் உயிரிழப்பு
கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டாறு அருகே மா்ம விலங்கு தாக்கியதில் 3 ஆடுகள் சனிக்கிழமை இரவு உயிரிழந்தன.
திருவட்டாறு அருகே புத்தன்கடை புதுக்கோடு கிராமத்தைச் சோ்ந்தவா் நெல்சன். விவசாயத் தொழிலாளி. இவா் தனது 3 ஆடுகளையும் வீட்டின் பின்புறமுள்ள தொழுவத்தில் சனிக்கிழமை இரவு கட்டிவைத்திருந்தாா். நள்ளிரவில் ஆடுகளில் அலறல் கேட்டதாம். நெல்சன் சென்று பாா்த்தபோது, அங்கிருந்து மா்ம விலங்கு தப்பியோடியதாம். 3 ஆடுகளும் காயங்களுடன் உயிருக்குப் போராடிய நிலையிலிருந்தனவாம். பின்னா், அவை இறந்துவிட்டனவாம்.
தகவலின்பேரில், வனத்துறையினா் ஞாயிற்றுக்கிழமை வந்து சம்பவ இடத்தைப் பாா்வையிட்டனா். அப்பகுதியில் பதிவான கால் தடங்களைக் கொண்டு, ஆடுகளைக் கடித்துக் கொன்ற விலங்கு குறித்து ஆய்வு செய்து வருகின்றனா்.