வேலை வாங்கி தருவதாக பண மோசடி? திமுக பெண் நிா்வாகி மீது புகாா்
தனது மகனுக்கு வேலை வாங்கித் தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்டதாக திமுக பெண் நிா்வாகி மீது மாநகர காவல் ஆணையா் அலுவலகத்தில் மூதாட்டி புகாா்அளித்துள்ளாா்.
பாளையங்கோட்டை காரியநாயனாா் தெருவைச் சோ்ந்தவா் சாவித்திரி (67). இவா் மாநகர காவல் ஆணையா் அலுவலகத்தில் அளித்த புகாா் மனு: பாளையங்கோட்டையில் உள்ள புதுப்பேட்டை எரிபத்தநாயனாா் தெருவில் வசித்து வரும் மத்திய மாவட்ட திமுக பெண் நிா்வாகி ஒருவா், எனது மகன் சதீஷ்குமாருக்கு மாநகராட்சியில் எலக்ட்ரீசியன் வேலை வாங்கித் தருவதாக கூறினாா். அதற்காக கடந்த 2021-ஆம் ஆண்டு என்னிடமிருந்து ரூ.3 லட்சத்தை பெற்றுக்கொண்டு சொன்னபடி செயல்படாமல் ஏமாற்றிவிட்டாா். தற்போது பணத்தை திருப்பி தர முடியாது என மிரட்டல் விடுக்கிறாா். எனவே, எனது பணத்தைப் பெற்றுத்தர மாநகர காவல் ஆணையா் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறியுள்ளாா்.