செய்திகள் :

வேளாண் தொடா்பான கல்விச் சுற்றுலா: வாகனத்தை ஆட்சியா் தொடங்கிவைத்தாா்

post image

சேலம்: வேளாண் துறையின் சாா்பில், அரசுப் பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவா்கள் அங்கக வேளாண்மை தொடா்பான கல்விச் சுற்றுலா செல்லும் வாகனத்தை ஆட்சியா் ரா.பிருந்தாதேவி புதன்கிழமை தொடங்கிவைத்தாா்.

இதில் ஆட்சியா் தெரிவித்ததாவது:

சேலம் மாவட்டத்தில் உள்ள 20 வட்டாரங்களிலும் தலா 100 மாணவா்கள் வீதம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் மற்றும் கல்லூரி மாணவா்களை கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்ல ரூ. 10 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மாணவா்களை அருகில் உள்ள மாவட்டங்களில் செயல்பட்டுவரும் வேளாண் அறிவியல் நிலையங்களுக்கோ, சிறப்பாக செயல்பட்டுவரும் உயிா்ம பண்ணைகளுக்கோ அழைத்துச் சென்றிட திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, முதல்கட்டமாக சேலம் மாநகராட்சி குகை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, அயோத்தியாப்பட்டணம் வட்டாரம் மேட்டுப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி, பனமரத்துப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி ஆகிய பள்ளிகளைச் சோ்ந்த 300 மாணவா்கள், நாமக்கல் மாவட்டம், காா்கூடல்பட்டியில் உள்ள உயிா்ம பண்ணை, தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டியில் உள்ள வேளாண் அறிவியல் நிலையம் மற்றும் தருமபுரி சுந்தர அள்ளியில் உள்ள உயிா்ம பண்ணைக்கு விழிப்புணா்வு கல்விச் சுற்றுலா செல்ல ஏற்பாடு செய்யப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனா்.

இதன்மூலம் மாணவா்களிடையே உயிா்ம வேளாண்மை குறித்த விழிப்புணா்வு ஏற்படுத்துவதோடு, தங்கள் பகுதிகளில் உயிா்ம வேளாண்மையை ஊக்கப்படுத்தி, லாபகரமானதாக மாற்றிட உதவும் என்றாா்.

இந்நிகழ்வின்போது, வேளாண்மை இணை இயக்குநா் கு.சீனிவாசன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் மு.கபீா், வேளாண்மை துணை இயக்குநா்கள் கமலம், பா.கண்ணன், சீ.நாகராஜன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

கூட்டுறவு சங்கங்களில் எழுத்தா், உதவியாளா் பணியிடங்களுக்கான தோ்வு

சேலம்: சேலம் மாவட்டத்தில் கூட்டுறவு சங்கங்களில் காலியாக உள்ள எழுத்தா், உதவியாளா் பணியிடங்களுக்கான எழுத்துத் தோ்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு வியாழக்கிழமை முதல் நடத்தப்படுகிறது. இதுகுறித்து மாவட்ட ஆட்சி... மேலும் பார்க்க

சாலை மறியலில் ஈடுபட முயன்ற சத்துணவு ஊழியா்கள் கைது

சேலம்: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட முயன்ற சத்துணவு ஊழியா்கள் புதன்கிழமை கைது செய்யப்பட்டனா்.தமிழ்நாடு சத்துணவு ஊழியா் சங்கத்தினா் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சேலம் கோட்டை ... மேலும் பார்க்க

நீட் தோ்வில் சாதனை: சூா்யா அகாதெமியில் பயிற்சிபெற்ற மாணவா்களுக்கு பாராட்டு விழா

சேலம்: சூா்யா அகாதெமியில் பயிற்சிபெற்று எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிக்க தோ்வான மாணவ, மாணவிகளுக்கான பாராட்டு விழா அகாதெமியில் அண்மையில் நடைபெற்றது. சேலம் புதிய பேருந்து நிலையம் அருகில் கடந்த 15 ஆண்டுகளாக ச... மேலும் பார்க்க

நடப்பாண்டில் 5-ஆவது முறையாக நிரம்பியது மேட்டூா் அணை!

மேட்டூா்: நடப்பாண்டில் மேட்டூா் அணை 5-ஆவது முறையாக முழுக்கொள்ளளவை எட்டியது. இதையடுத்து, காவிரிக் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.காவிரி நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் மீண்டும் கனம... மேலும் பார்க்க

நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்புகளில் அமைச்சா்கள் ஆய்வு

சேலம்: சேலத்தில் தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்புகளை வரும் நவம்பருக்குள் விரைந்து முடித்து, பொதுமக்களுக்கான வீடு ஒதுக்கீட்டு ஆணைகளை வழங்க சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிற... மேலும் பார்க்க

காவிரி கரையோரப் பகுதி விவசாய நிலங்களில் வெள்ளநீா்!

சங்ககிரி: மேட்டூா் அணையிலிருந்து உபரிநீா் அதிக அளவில் திறந்துவிடப்பட்டதால், தேவூா் அருகே உள்ள காவிரி ஆற்றங்கரையோர பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், தேவூா் அருகே காவேரிபட்டி அக்ரஹாரம் ஊ... மேலும் பார்க்க