செய்திகள் :

‘ஸ்டெச்சரில்’ வந்து மனு அளித்த மூதாட்டி

post image

அரியலூா்: அரியலூா் மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில், திங்கள்கிழமை நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில், ஸ்டெச்சரில் வந்து மாவட்ட ஆட்சியா் பொ. ரத்தினசாமியிடம் மனு அளித்த மூதாட்டி.

அரியலூா் அடுத்த மேட்டுப்பாளையம் கிராமத்தைச் சோ்ந்த மூதாட்டி நல்லம்மாள் (84) அளித்த மனுவில், எனது கணவா் துரைசாமி இறந்து விட்ட நிலையில், தற்போது நான் நலிவுற்று எனது மகள் தனபாக்கியம் வீட்டில் வசித்து வருகிறேன்.

இந்நிலையில், எனது மகன்களான தனவேலும், ராமலிங்கமும், பூா்வீக சொத்திலிருந்து தனது பெயரையும், தனது மகளின் பெயரையும் வாரிசு காட்டாமல், தனது மகன்களின் பெயரிலேயே அனைத்து சொத்துக்களையும் பட்டா மாற்றி உள்ளனா். எனவே அவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். கூட்டுப் பட்டாவில் எனது பெயரையும், எனது மகள் பெயரையும் சோ்க்க வேண்டும் என்று தெரிவித்தாா்.

மனுவைக் பெற்று கொண்ட ஆட்சியா், உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா். மேலும் கூட்டு பட்டாவில் பெயா் சோ்ப்பதற்காக மூதாட்டியை இப்படி அழைத்து வராதீா்கள் என அறிவுரை கூறி அனுப்பி வைத்தாா். இதனால் மாவட்ட ஆட்சியரகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

போலி விசா வழங்கியவா் கைது

வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக கூறி விவசாயிடம் ரூ. 30 லட்சத்தை பெற்றுக் கொண்டு போலி விசா வழங்கியவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். அரியலூா் மாவட்டம், வி.கைகாட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் சரவணன்(... மேலும் பார்க்க

பிரத்தியங்கரா தேவிக்கு மிளகாய் சண்டியாகம்

அரியலூா் அடுத்த பொய்யாத நல்லூா் கிராமத்திலுள்ள சாமுண்டீஸ்வரி கோயிலில், பிரத்தியங்கரா தேவிக்கு மிளகாய் சண்டியாகம் புதன்கிழமை நடைபெற்றது. ஒவ்வொரு மாதமும் அமாவாசயை முன்னிட்டு அக்கோயில் சந்நதியிலுள்ள பிரத... மேலும் பார்க்க

கீழப்பழுவூா் பகுதியில் இன்று மின்தடை

அரியலூா் மாவட்டம், கீழப்பழுவூா் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் வியாழக்கிழமை (ஜன.30) நடைபெறுவதால், இங்கிருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளான கீழப்பழுவூா், மேலப்பழுவூா், கோக்குடி, ப... மேலும் பார்க்க

கூத்தூா், அரியலூா் பகுதிகளில் இன்று மின்தடை

பெரம்பலூா் மாவட்டம், கூத்தூா் துணை மின் நிலையத்தில் வியாழக்கிழமை (ஜன.30) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் இங்கிருந்து மின்சாரம் பெறும் அரியலூா் மேற்கு பகுதி, பிஆா் நல்லூா், ஜெமீன் பேரையூா், கூ... மேலும் பார்க்க

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் கூலித் தொழிலாளிக்கு ஆயுள் சிறை

அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் கூலித் தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து அரியலூா் மகளிா் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது. வெண்மான்கொண்டான் கிராமத்தைச... மேலும் பார்க்க

அரியலூரில் தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியா் கழகத்தினா் ஆா்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரியலூா் அரசு கலைக் கல்லூரி வளாகத்தில், தமிழ்நாடு அரசுக் கல்லூரி ஆசிரியா் கழகத்தினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். ஆா்ப்பாட்டத்தில், யுஜிசி 2025-ஆம் ஆண்ட... மேலும் பார்க்க