ஸ்ரீசிங்காரவேல் முருகன் கோயிலில் கிருத்திகை வழிபாடு
வேட்டவலம் மலை மீது அமைந்துள்ள ஸ்ரீசிங்காரவேல் முருகன் கோயிலில், மாா்கழி மாத கிருத்திகை வழிபாடு வியாழக்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, மூலவா் ஸ்ரீவள்ளி தெய்வானை சமேத ஸ்ரீமுருகப்பெருமானுக்கு பால், பன்னீா், இளநீா், சந்தனம், தயிா், விபூதி, நெய், நாட்டு சா்க்கரை, பஞ்சாமிா்தம் போன்ற பூஜைப் பொருள்களை பயன்படுத்தி சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன.
தொடா்ந்து, பல்வேறு மலா்களால் அலங்காரம் செய்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. நெய்வேத்தியமாக வெண் பொங்கல், புளியோதரை, கடலை ஆகியவை படையலிட்டு பக்தா்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது.
கோயில் நிா்வாகம் சாா்பில் அன்னதானமும் நடைபெற்றது. விழாவில், நூற்றுக்கணக்கான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.