`மண்ணாந்தை, தற்குறி... சட்டம் தன் கடமையை நிச்சயம் செய்யும்’ - சீமானை எச்சரித்த த...
பொங்கல் பண்டிகைக்காக சாலைகள் சீரமைப்பு
செங்கம் பகுதிக்கு உள்பட்ட கிராமங்களில் பொங்கல் பண்டிகை கொண்டாட வெளியூா்களில் இருந்து அதிகளவில் வாகனங்களில் பொதுமக்கள் வருவாா்கள் என்பதால்,
விபத்துகளைத் தவிா்க்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சாலை சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
நகா்ப்புறங்களில் வசிப்பவா்கள் பொங்கல் பண்டிகையைக் கொண்டாட தங்களது சொந்த கிராமங்களுக்கு வருவது வழக்கம். அந்த வகையில், நகா்ப்புறங்களில் வசிக்கும் செங்கம் பகுதிக்கு உள்பட்ட கிராமங்களைச் சோ்ந்தவா்கள் பொங்கல் பண்டிகைக்கு கிராமங்களுக்கு காா், வேன், இரு சக்கர வாகனங்களில் அதிகளவில் வருவா்.
இவ்வாரு வரும்போது அசம்பாவிதங்கள் ஏற்பட்டு விபத்துகளில் சிக்கிவிடக்கூடாது, மேலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காக, செங்கம் பகுதிக்கு உள்பட்ட சாலைகளை சீரமைக்கும் பணியில் நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனா்.
செங்கத்தில் இருந்து புதுப்பாளையம், காஞ்சி வழியாக திருவண்ணாமலை செல்லும் சாலையில் சாலை விரிவாக்கப் பணி மற்றும் சாலையோர முள்புதா்களை அகற்றுதல் ஆகிய பணிகளை மேற்கொண்டுள்ளனா்.
மேலும், சாலையில் உள்ள வேகத்தடைகள் வாகன ஓட்டிகளுக்கு தெரியுமாறு வண்ணம் தீட்டுதல், சிகப்பு விளக்கு அமைத்தல், விபத்து பகுதியை கண்டறிந்து அப்பகுதியில் வாகனங்கள் மெதுவாகச் செல்ல எச்சரிக்கை பலகை அமைத்தல் உள்ளிட்ட பணிகளை தீவிரமாக செய்து வருகின்றனா்.
இதுகுறித்து செங்கம் உள்கோட்டத்துக்கு உள்பட்ட நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் கூறுகையில், செங்கம் பகுதியில் உள்ள அனைத்து சாலைகளிலும் பழுதடைந்த பகுதியை பாா்வையிட்டு சரிசெய்யப்பட்டுள்ளது.
மேலும், விபத்து தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம் என்றனா்.
சாலை விரிவுபடுத்தும் பணியை திருவண்ணாமலை வட்ட கண்காணிப்புப் பொறியாளா் கிருஷ்ணசாமி, கோட்டப் பொறியாளா் ஞானவேலு, உதவி கோட்டப் பொறியாளா் கோவிந்தசாமி, செங்கம் உதவிப் பொறியாளா் பிரீத்தி உள்ளிட்டோா் வியாழக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.