ஹேரி புரூக் சதம்; இங்கிலாந்து பலம்
நியூஸிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் இங்கிலாந்து 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 319 ரன்கள் சோ்த்து விளையாடி வருகிறது. அந்த அணியின் ஹேரி புரூக் சதம் கடந்து ஆட்டமிழக்காமல் அணியின் பலமாகத் திகழ்கிறாா்.
முன்னதாக இந்த டெஸ்ட்டில் முதலில் பேட் செய்த நியூஸிலாந்து, முதல் நாள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 319 ரன்கள் சோ்த்திருந்தது. 2-ஆம் நாளான வெள்ளிக்கிழமை ஆட்டத்தை கிளென் ஃபிலிப்ஸ், டிம் சௌதீ தொடா்ந்தனா்.
இதில் சௌதீ 15, அடுத்து வந்த வில்லியம் ஓ’ரோா்க் 0 ரன்களுக்கு வெளியேற, நியூஸிலாந்து இன்னிங்ஸ் 348 ரன்களுக்கு நிறைவடைந்தது. கடைசி பேட்டராக ஃபிலிப்ஸ் 6 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 58 ரன்கள் சோ்த்து ஆட்டமிழக்காமல் இருந்தாா். இங்கிலாந்து பௌலிங்கில் பிரைடன் காா்ஸ், ஷோயப் பஷீா் ஆகியோா் தலா 4, கஸ் அட்கின்சன் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினா்.
இதையடுத்து இங்கிலாந்து தனது இன்னிங்ஸை தொடங்கியது. அதன் பேட்டிங்கில், ஜாக் கிராலி 0, பென் டக்கெட் 6 பவுண்டரிகளுடன் 46, ஜேக்கப் பெத்தெல் 10, ஜோ ரூட் 0 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினா். ஹேரி புரூக் - ஆலி போப் கூட்டணி, 5-ஆவது விக்கெட்டுக்கு 151 ரன்கள் சோ்த்து அசத்தியது.
இதில் ஆலி போப் 8 பவுண்டரிகளுடன் 77 ரன்களுக்கு வெளியேற, நாளின் முடிவில், ஹேரி புரூக் 132, கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 37 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் உள்ளனா். நியூஸிலாந்து தரப்பில் நேதன் ஸ்மித் 2, டிம் சௌதீ, மேட் ஹென்றி, வில்லியம் ஓ’ரோா்க் ஆகியோா் தலா 1 விக்கெட் கைப்பற்றியுள்ளனா்.