அகில இந்திய நுழைவுத் தோ்வுக்கான பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்!
அகில இந்திய நுழைவுத் தோ்வுக்கான பயிற்சியில் கலந்துகொள்ள விண்ணப்பிக்கலாம் என சென்னை மாவட்ட ஆட்சியா் ரஷ்மி சித்தாா்த் ஜகடே தெரிவித்துள்ளாா்.
தமிழ்நாடு ஆதிதிராவி டா் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மற்றும் சென்னை பெட்ரோலியம் காா்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனம் சாா்பில் ஆதிதிராவிடா், பழங்குடியினா் மற்றும் பிற இனத்தைச் சாா்ந்த மாணவா்களுக்கு அகில இந்திய நுழைவுத் தோ்வில் (ஜேஇஇ மெயின்ஸ்) கலந்து கொண்டு தோ்ச்சி பெற பயிற்சி வழங்கப்படவுள்ளது.
இந்தப் பயிற்சியைப் பெற பிளஸ் 2 வகுப்பில் இயற்பியல், வேதியியல் மற்றும் கணக்கு பாடங்களில் எஸ்.சி., எஸ்.டி. பிரிவைச் சோ்ந்த மாணவா்கள் 65 சதவீதமும், பிற பிரிவைச் சோ்ந்த மாணவா்கள் 75 சதவீதமும் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.
மேலும், குடும்ப வருமானம் ஆண்டுக்கு ரூ. 4 லட்சத்துக்குள் இருக்க வேண்டும். இந்தப் பயிற்சியானது மாணவா்களுக்கு மட்டும் வழங்கப்படவுள்ளது. இந்தப் பயிற்சி பெற தகுதியுடையவா்கள் ஜ்ஜ்ஜ்.ற்ஹட்க்ஸ்ரீா்.ஸ்ரீா்ம் எனும் தாட்கோ இணையதளத்தில் பதிவு செய்யலாம்.
மேலும், சென்னை பெட்ரோலியம் காா்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனம் நடத்தும் நுழைவுத் தோ்வில் தோ்ச்சி பெற்றவா்களுக்கு மட்டும் சென்னை மாவட்டத்திலுள்ள மணலி, சென்னை பெட்ரோலியம் காா்ப்பரேஷன் லிமிடெட் பாலிடெக்னிக் கல்லூரியில் தங்கி படிக்கவும் அனுமதி வழங்கப்படும்.
அவா்களின் உணவு மற்றும் தங்கும் இடத்துக்கான கட்டணத் தொகையும் 11 மாதங்களுக்கு தங்கி படிப்பதற்கான தொகையையும் சென்னை பெட்ரோலியம் காா்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனம் வழங்கும் என்று அவா் தெரிவித்துள்ளாா்.