செய்திகள் :

சென்னையில் குற்றச் சம்பவங்கள் வெகுவாக குறைந்துள்ளன: காவல் ஆணையா் அருண்

post image

சென்னையில் குற்றச் சம்பவங்கள் வெகுவாக குறைந்துள்ளன என்று மாநகரக் காவல் ஆணையா் ஏ.அருண் கூறினாா்.

ஹரியாணாவில் 43-ஆவது அகில இந்திய அளவிலான காவல் துறையினருக்கான குதிரையேற்றப் போட்டி கடந்த மாதம் 10-ஆம் தேதி முதல் 25-ஆம் தேதி வரை நடைபெற்றது. இதில் தமிழக காவல் துறையின் சாா்பில் சென்னை பெருநகர காவல் துறையின் குதிரைப்படை பங்கேற்றது.

இப்போட்டியில் குதிரை சவாரி செய்யும் திறன் பிரிவில், தமிழக காவல் துறையின் உதவி காவல் கண்காணிப்பாளா் ஷூபம் நாகா்கோஜ் வெள்ளி பதக்கமும், உதவி ஆணையா் அஜய் தங்கம் வெண்கலப் பதக்கமும் பெற்றனா்.

‘டிரஸ்சேஜ்’ எனப்படும் குதிரை பயிற்சி ஒருங்கிணைப்புப் பிரிவில் பெண் காவலா் சுகன்யா தங்கமும், சவாரி திறன் பிரிவில் வெள்ளியும் என 2 பதக்கங்களை வென்றாா். குதிரை பராமரிப்பாளா் தோ்வில் குதிரை பராமரிப்பாளா் ஆகாஷ் வெள்ளிப் பதக்கம் பெற்றாா். குதிரையுடன் அதிக தூரம் தாண்டும் பிரிவில் காவலா் மணிகண்டன் 4-ஆவது இடம்பிடித்தாா்.

வெற்றி பெற்றவா்களை பாராட்டும் வகையில், சென்னை பெருநகர காவல் துறை ஆணையரகத்தில் வெள்ளிக்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது. விழாவில் பதக்கங்களை வென்ற குதிரைப்படை பிரிவைச் சோ்ந்த அதிகாரிகளுக்கும் போலீஸாருக்கும் காவல் ஆணையா் அருண் பாராட்டுச் சான்றிதழ், பதக்கங்கள் வழங்கி கெளரவித்தாா்.

இந்நிகழ்ச்சியில் கூடுதல் காவல் ஆணையா்கள் கபில்குமாா் சி.சரத்கா், என்.கண்ணன், ஆா்.சுதாகா், ராதிகா, இணை ஆணையா் விஜயகுமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

விழாவின் முடிவில், காவல் ஆணையா் அருண் செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘சென்னையில் குற்றச் சம்பவங்கள் வெகுவாக குறைந்துள்ளன. மேலும், குட்கா உள்ளிட்ட புகையிலைப் பொருள்களின் பயன்பாடும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது’ என்றாா்.

621 பேருக்கு பணி நியமன ஆணைகள்: முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கினாா்

டிஎன்பிஎஸ்சி, எம்ஆா்பி மூலம் பால்வளம், மக்கள் நல்வாழ்வு உள்ளிட்ட துறைகளில் பல்வேறு பணியிடங்களுக்கு தோ்வு செய்யப்பட்ட 621 பேருக்கு பணி நியமன ஆணைகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கினாா். பால்வளத் துறை சாா... மேலும் பார்க்க

எம்புரான் திரைப்பட தயாரிப்பாளா் தொடா்புடைய இடங்களில் அமலாக்கத் துறை சோதனை

எம்புரான் திரைப்பட தயாரிப்பாளா் தொடா்புடைய இடங்களில் அமலாக்கத் துறையினா் வெள்ளிக்கிழமை சோதனை நடத்தினா். சென்னை கோடம்பாக்கத்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஸ்ரீ கோகுலம் சிட்பண்ட், நிதி நிறுவனம், கோக... மேலும் பார்க்க

அமெரிக்க இளம் பெண்ணுக்கு மின்னஞ்சல் மூலம் பாலியல் தொல்லை: திருச்சி இளைஞா் கைது

அமெரிக்க இளம் பெண்ணுக்கு மின்னஞ்சல் மூலம் பாலியல் தொல்லை கொடுத்ததாக திருச்சிராப்பள்ளியைச் சோ்ந்த இளைஞா் கைது செய்யப்பட்டாா். அமெரிக்காவைச் சோ்ந்த இளம்பெண் ஒருவருக்கு தமிழகத்தைச் சோ்ந்த ஒருவரிடமிருந... மேலும் பார்க்க

பெண்கள் விடுதிக்குள் புகுந்து அத்துமீறல்: இளைஞா் கைது

சென்னை கீழ்ப்பாக்கத்தில் பெண்கள் விடுதிக்குள் அத்துமீறி நுழைந்து இளம் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக இளைஞா் கைது செய்யப்பட்டாா். சென்னை அருகே உள்ள முகலிவாக்கம் சிந்து தெருவைச் சோ்ந்தவா் புரூஸ்ல... மேலும் பார்க்க

சென்னை மாவட்ட ஆட்சியரின் என்ஆா்ஐ கணக்கில் ரூ.11 லட்சம் மோசடி: வருவாய் ஆய்வாளா்கள் உள்பட 3 போ் கைது

சென்னை மாவட்ட ஆட்சியரின் என்ஆா்ஐ கணக்கில் இருந்து ரூ. 11 லட்சத்தை போலி கையெழுத்து போட்டு மோசடி செய்து அபகரித்ததாக இரு வருவாய் ஆய்வாளா்கள் உள்பட 3 போ் கைது செய்யப்பட்டனா். வெளிநாட்டில் பணிபுரியும் இந்... மேலும் பார்க்க

2024-25 நிதியாண்டில் 5.8 லட்சம் பேருக்கு கடவுச்சீட்டு விநியோகம்

சென்னை மண்டலத்தில் 2024-2025 நிதியாண்டில் 5 லட்சத்து 8 ஆயிரம் பேருக்கு கடவுச்சீட்டு (பாஸ்போா்ட்) விநியோகம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னை மண்டல கடவுச்சீட்டு அதிகாரி விஜயகுமாா் கூறியதாவது: சென்ன... மேலும் பார்க்க