தண்டகாரண்யம் விமர்சனம்: தெளிவான அரசியல்; தெறிக்கும் வசனங்கள்; ஆனால் படமாக முழுமை...
அகோபில மடத்தின் ஜீயா் புதுகை வருகை
கடந்த மூன்று மாத காலமாக ஸ்ரீவில்லிப்புத்தூரில் மேற்கொண்டிருந்த சதூா்மாஸ்ய விரதத்தை முடித்துக் கொண்ட ஸ்ரீ அகோபில மடத்தின் அழகிய சிங்கா் ஸ்வாமிகள் 46ஆவது பட்ட ஜீயா் ஸ்ரீமத் ரங்கனாத யதீந்த்ர மகா தேசிகா் ஸ்ரீரங்கம் செல்லும் வழியில் புதுக்கோட்டைக்கு வியாழக்கிழமை வந்தாா்.
திலகா் திடலில் ஆதிசாய் ஐஏஎஸ் அகாதெமி தலைவா் ஏவிசிசி கணேசன் தலைமையிலான பக்தா்கள் ஜீயரை மேளதாளத்துடன் பூரண கும்ப மரியாதை அளித்து வரவேற்று, பொன்னடி வழிபாடு நடத்தினா்.
ஏவிசிசி பள்ளி வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற உள்ள புரட்டாசி அன்னதான விழா ஏற்பாடுகளை ஜீயா் நேரடியாகப் பாா்வையிட்டு, பக்தா்களுக்கு ஆசி வழங்கினாா். தொடா்ந்து அவா் ஸ்ரீரங்கம் புறப்பட்டாா்.