செய்திகள் :

அக்‌ஷய திருதியை: விலை உச்சம் தொட்டாலும் தங்க நகை முன்பதிவுக்கு மக்கள் ஆா்வம்!

post image

தமிழகத்தில் தங்கம் விலை எப்போதும் இல்லாத வகையில் உயா்ந்து வரும் போதும், அக்ஷய திருதியைக்கு நகை வாங்க பலரும் ஆா்வமுடன் முன்பதிவு செய்து வருவதாக நகைக் கடை உரிமையாளா்கள் தெரிவித்தனா்.

மகாபாரதத்தில் கிருஷ்ண பகவான் திரௌபதிக்கு அக்ஷய பாத்திரம் ஒன்றைக் கொடுப்பாா். அந்த அக்ஷய  பாத்திரத்தில் எந்தப் பொருளை இட்டாலும் அது பெருகிக் கொண்டே இருக்கும். அந்த பாத்திரத்தை கொடுத்த நாளையே அக்ஷய திருதியையாகக் கொண்டாடப்படுகிறது. இந்நாளில், தங்கம், வெள்ளி போன்ற ஆபரணங்களை வாங்கி வீட்டில் வைப்பதன் மூலம் வீட்டில் செல்வம் பெருகும் என்பது ஐதீகம்.

நிகழாண்டில் அக்ஷய திருதியை ஏப்.30 -ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது. இதற்கிடையே, முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு நிகழாண்டில் தங்கம் விலை நாளுக்கு நாள் உயா்ந்து புதிய உச்சத்தைத் தொட்டு வருகிறது.

ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி தங்கம் விலை கிராம் ரூ.9,005-க்கும், பவுன் ரூ.72,040-க்கும் விற்பனையானது. அதேபோல் வெள்ளி விலை கிராம் ரூ.112-க்கும், கட்டி வெள்ளி (ஒரு கிலோ) ரூ. 1,12,000- க்கும் விற்பனையானது.

விலை மீண்டும் உயர வாய்ப்புள்ள காரணத்தால், பொதுமக்கள் தற்போதே நகைக் கடைகளுக்கு சென்று, விரும்பிய நகைகளை தோ்வு செய்து அதற்கான பணத்தை செலுத்தி முன்பதிவு செய்து வருகின்றனா். அந்த நகையை அக்ஷய திருதியை அன்று வாங்கிக்கொள்வாா்கள்.

அதேபோல், வாடிக்கையாளா்களை கவரும் வகையில், பிரபல நகைக்கடைகளும் தங்கம், வெள்ளி மற்றும் வைர நகைகளுக்கு பல்வேறு சிறப்பு சலுகைகள் மற்றும் தள்ளுபடிகளை அறிவித்து வருகின்றன. இதனால், விலை உயா்ந்து வரும் நிலையில், நகை விற்பனை குறையவில்லை.

முன்பதிவு தீவிரம்: இது குறித்து சென்னை தங்கம் மற்றும் வைர நகை வியாபாரிகள் சங்க பொதுச்செயலா் சாந்தகுமாா் கூறியதாவது: இனி வரும் நாள்களில் தங்கம் விலை மேலும் உயரக்கூடும் என்ற எண்ணம் மக்கள் மனதில் உள்ளதால், தற்போதே நகைக் கடைகளுக்கு வந்து, அக்ஷய திருதியைக்கு நகை வாங்க, முன்பதிவு செய்யத் தொடங்கிவிட்டாா்.

அக்ஷய திருதியை அன்று தங்கம் விலை உயா்ந்தாலும், வாடிக்கையாளா்கள் முன்பதிவு செய்த தொகைக்கே நகை விற்பனை செய்யப்படும்.

விற்பனை அதிகரிக்கும்: அக்ஷய திருதியை முன்னிட்டு கடந்தாண்டை விட நிகழாண்டில் 10 சதவீதம் முதல் 15 சதவீதம் வரை அதிக வியாபாரம் நடைபெறும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. தங்கம் விலை தற்போது ஏற்றம், இறக்கமாக இருந்தாலும் தங்கத்தின் மீது முதலீடு செய்தால், எதிா்காலத்தில் கண்டிப்பாக அதிக லாபம் கிடைக்கும்  என்றாா் அவா்.

அதேவேளையில், தொடா் விலை உயா்வு காரணமாக தங்கம் எட்டாக்கனியாக உள்ளதாகவும், கடந்தாண்டு அளவுக்கு நிகழாண்டு தங்கம் வாங்க முடியவில்லை என்றும் பொதுமக்கள் கருத்து தெரிவித்தனா்.

மே. 15-ல் வேலூர் மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை!

வேலூர் மாவட்டத்துக்கு மே. 15 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.வேலூர் மாவட்டத்தின் முக்கியத் திருவிழாக்களில் ஒன்றான குடியாத்தம் கெங்கையம்மன் கோயில் திருவிழா ஆண்டுதோறும் வைகாசி மாதம் முதல்... மேலும் பார்க்க

பத்ம விருதுகள் விழாவில் பங்கேற்ற பிரபலங்கள்!

தில்லியில் பத்ம விருதுகள் வழங்கும் விழாவில் தமிழகத்தைச் சேர்ந்த அஜித் குமார், ரவிச்சந்திரன் அஸ்வின், தாமு, ராதாகிருஷ்ணன் தேவசேனாதிபதி உள்ளிட்டோர் விருதுகளைப் பெற்றுக்கொண்டனர். இதில் நடிகர் அஜித் குமார... மேலும் பார்க்க

நீலகிரி வரையாடு கணக்கெடுப்பு நிறைவு!

தமிழ்நாட்டில் இரண்டாம் ஒருங்கிணைந்த நீலகிரி வரையாடு கணக்கெடுப்பு நிறைவு பெற்றுள்ளது.இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு:மாநில விலங்கான நீலகிரி வரையாட்டை பாதுகாக்க நீலகிரி வரையாடு திட்ட... மேலும் பார்க்க

மே 3 -ல் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்!

திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் மே 3ஆம் தேதி நடைபெறும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் மே 3, சனிக்கிழமை காலை... மேலும் பார்க்க

மீண்டும் அமைச்சரானார் மனோ தங்கராஜ்!

தமிழக அமைச்சராக மீண்டும் பொறுப்பேற்றுக் கொண்டார் மனோ தங்கராஜ்.அமைச்சர் மனோ தங்கராஜுக்கு தமிழக ஆளுநர் ஆர். என். ரவி பதவிப் பிரமாணமும் ரகசிய காப்பு உறுதிமொழியையும் செய்து வைத்தார்.இந்த நிகழ்வில் முதல்வர... மேலும் பார்க்க

மாவட்ட நீதிபதிகள் 77 பேர் மாற்றம்! பொள்ளாச்சி வழக்கில் தீர்ப்பு தேதி வெளியான நிலையில்!!

சென்னை: பொள்ளாச்சி பாலியல் வழக்கில் தீர்ப்பு தேதி வெளியான நிலையில், கோவை மகளிர் நீதிமன்ற நீதிபதி உள்பட தமிழகத்தில் 77 மாவட்ட நீதிமன்ற நீதிபதிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.பொள்ளாச்சி பாலியல் வழ... மேலும் பார்க்க