ஒருநாள், டெஸ்ட் அணி கேப்டனாக ரோகித் சர்மா நீடிப்பார்: பிசிசிஐ!
அங்கோலாவில் காலராவுக்கு 12 பேர் பலி
அங்கோலாவில் காலராவுக்கு 12 பேர் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து அந்நாட்டின் சுகாதார அமைச்சகம் தெரிவித்திருப்பதாவது, நாட்டில் 170 க்கும் மேற்பட்டோர் காலராவுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர்.
அவற்றில் 14 பாதிப்புகள் ஆய்வக சோதனை மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. கடந்த செவ்வாய்கிழமை முதல் காலராவுக்கு இதுவரை 12 பேர் பலியாகியுள்ளனர்.
இன்று 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!
பெரும்பாலான பாதிப்புகள் புறநகர்ப் பகுதியான க்வாக்கிவேகோ நகராட்சியில் கண்டறியப்பட்டுள்ளது. இங்கு 1.2 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வசிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
காலரா ஒரு பாக்டீரீயா தொற்றுநோய் ஆகும்.
அசுத்தமான சுகாதாரமற்ற உணவு அல்லது தண்ணீரை உட்கொள்ளுவதால் இந்தத் தொற்று ஏற்படுகிறது.