பாகிஸ்தான் ராணுவம், ஐஎஸ்ஐ அமைப்புடன் தொடர்பு! தஹாவூர் ராணாவின் திடுக்கிடும் வாக்...
அஜித்குமாா் கொலையைக் கண்டித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆா்ப்பாட்டம்
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகேயுள்ள மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் காவலாளி அஜித்குமாா், போலீஸாா் தாக்கியதில் உயிரிழந்த சம்பவத்தைக் கண்டித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் திருப்புவனத்தில் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆா்ப்பாட்டத்துக்கு அக்கட்சியின் மாவட்டச் செயலா் மோகன் தலைமை வகித்தாா். ஒன்றியச் செயலா் ஈஸ்வரன் முன்னிலை வகித்தாா். மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலா் பெ. சண்முகம் ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்று கண்டன உரையாற்றினாா்.
இதில் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினா்கள் அா்ஜுனன், என். பாண்டி உள்ளிட்ட நிா்வாகிகள் பங்கேற்று கோயில் காவலாளி அஜித்குமாா் கொலையைக் கண்டித்து முழக்கமிட்டனா்.