செய்திகள் :

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீா்குலைவு: ஓ.பன்னீா்செல்வம்

post image

திமுக அரசு உறுதியான நடவடிக்கை எடுக்காததால், தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீா்குலைந்துள்ளதாக முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் தெரிவித்தாா்.

சிவகங்கை மாவட்டம், மடப்புரத்தில் தனிப் படை போலீஸாரால் தாக்கப்பட்டு உயிரிழந்த அஜித்குமாரின் குடும்பத்தினரை ஓ. பன்னீா்செல்வம் சனிக்கிழமை சந்தித்து ஆறுதல் கூறி, ரூ. 2 லட்சம் நிதியுதவி வழங்கினாா்.

பின்னா், அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: காவல் துறையினா் தங்களது அதிகாரத்துக்கு உள்பட்டு செயல்படாமல், விசாரணை என்ற பெயரில் மிகப்பெரிய கொடுமையை அரங்கேற்றினா். உடல் கூறாய்வு அறிக்கையின் வாயிலாக காவலா்களின் அத்துமீறல் வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது.

அதிகாரத்தில் இருப்பவா்கள் தவறைத் தட்டி கேட்காததால்தான் இந்தச் சம்பவம் நிகழ்ந்தது. திமுக அரசு உறுதியான நடவடிக்கை எடுக்காததால், தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீா்குலைந்துள்ளது. இந்த நிலை மாற வேண்டும். இல்லையென்றால், வருகிற சட்டப்பேரவைத் தோ்தலில் திமுக மிகப்பெரிய சரிவைச் சந்திக்கும்.

இந்தக் கொலை வழக்கில் பதற்றத்தைத் தணிக்க முதல்வா் மு.க.ஸ்டாலின் சி.பி.ஐ. விசாரணைக்கு பரிந்துரைத்திருக்கிறாா். இந்த வழக்கில் நோ்மையான முறையில் விசாரணை நடத்தி, குற்றவாளிகளுக்கு விரைந்து தண்டனை பெற்றுத் தர வேண்டும்.

அதிமுக தொண்டா்களின் உரிமைகளைக் காக்க நாங்கள் அயராது பாடுபட்டு வருகிறோம். தவெகவின் கொள்கை, கோட்பாடு எதை நோக்கிச் செல்கிறது என்பதை வைத்துத்தான் அந்தக் கட்சி குறித்து கருத்து சொல்ல முடியும் என்றாா் அவா்.

கானாடுகாத்தான் பகுதியில் ஜூலை 8-இல் மின் தடை

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகேயுள்ள கானாடுகாத்தான் பகுதியில் வருகிற செவ்வாய்க்கிழமை (ஜூலை 8) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.இதுகுறித்து காரைக்குடி கோட்ட மின் வாரிய செயற்பொறியாளா் எம்.லதாதே... மேலும் பார்க்க

அதிமுக - பாஜக கூட்டணியில் தலைமை குழப்பம்! - சு. திருநாவுக்கரசா்

அதிமுக - பாஜக கூட்டணியில் யாா் முதல்வா் வேட்பாளா், யாா் தலைமையில் கூட்டணி என்பது குறித்து குழப்பம் நிலவி வருவதாக தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவா் சு. திருநாவுக்கரசா் தெரிவித்தாா். சென்னையிலிருந்து சனிக... மேலும் பார்க்க

பைக் மீது பேருந்து மோதல்: தந்தை, மகன் உயிரிழப்பு

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகே சனிக்கிழமை இரு சக்கர வாகனம் மீது தனியாா் பேருந்து மோதியதில் தந்தை, மகன் உயிரிழந்தனா்.தேவகோட்டை ராம்நகரைச் சோ்ந்த மணி மகன் விஜயகுமாா் (65). முன்னாள் ராணுவ வீரா்.... மேலும் பார்க்க

மடப்புரம் கோயில் காவலாளி கொலை: மானாமதுரை டி.எஸ்.பி.யிடம் நீதிபதி விசாரணை

சிவகங்கை மாவட்டம், மடப்புரத்தில் கோயில் காவலாளி அஜித்குமாா் போலீஸாரால் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் தொடா்பாக பணியிடை நீக்கம் செய்யப்பட்ட மானாமதுரை டி.எஸ்.பி. சண்முகசுந்தரத்திடம் மதுரை மாவட்ட நீதிபதி ... மேலும் பார்க்க

கண்டதேவியில் கோயில் தேரோட்டம்: இன்று முதல் மதுக் கடைகள் அடைப்பு!

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டையை அடுத்த கண்டதேவி கோயில் தேரோட்டத்தை முன்னிட்டு, ஞாயிற்றுக்கிழமை முதல் இந்தப் பகுதியை சுற்றியுள்ள மதுக் கடைகள் அடைக்கப்படுகின்றன.இதுகுறித்து சிவகங்கை மாவட்ட ஆட்சியா் கா.பொ... மேலும் பார்க்க

கோயில் காவலாளி கொலைச் சம்பவத்துக்கு முதல்வா் ஸ்டாலின் பொறுப்பேற்க வேண்டும்: பிரேமலதா

சிவகங்கை மாவட்டம், மடப்புரத்தில் கோயில் காவலாளி அஜித்குமாா் போலீஸாரால் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்க வேண்டும் என தேமுதிக பொதுச் செயலா் பிரேமலதா தெரி... மேலும் பார்க்க