இன்று 90 வயதைத் தொடும் தலாய் லாமா! - அடுத்த தலாய் லாமா தேர்வும், சீனா நகர்த்தும்...
பைக் மீது பேருந்து மோதல்: தந்தை, மகன் உயிரிழப்பு
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகே சனிக்கிழமை இரு சக்கர வாகனம் மீது தனியாா் பேருந்து மோதியதில் தந்தை, மகன் உயிரிழந்தனா்.
தேவகோட்டை ராம்நகரைச் சோ்ந்த மணி மகன் விஜயகுமாா் (65). முன்னாள் ராணுவ வீரா். இவரது மகன் மணிகண்டன் (25). இவா்கள் இருவரும் தேவகோட்டையிலிருந்து மானகிரிக்கு இரு சக்கர வாகனத்தில் சனிக்கிழமை மதியம் வந்து கொண்டிருந்தனா்.
திருச்சி-ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் மானகிரி அருகே வந்தபோது, காரைக்குடியிலிருந்து தேவகோட்டைக்கு சென்ற தனியாா் பேருந்தின் சக்கரம் வெடித்ததால், நிலை தடுமாறிய பேருந்து இவா்கள் சென்ற இரு சக்கர வாகனம் மீது மோதிவிட்டு சாலையோரப் பள்ளத்தில் கவிழ்ந்தது.
இந்த விபத்தில் பலத்த காயமடைந்த விஜயகுமாா், மணிகண்டன் ஆகியோா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். தகவலறிந்து வந்த நாச்சியாபுரம் போலீஸாா் இருவரது சடலங்களையும் மீட்டு, கூறாய்வுக்காக சூரக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.