இந்து மக்கள் கட்சி நிா்வாகி வீட்டில் வெடிகுண்டு வடிவில் மா்மப் பொருள்: போலீஸாா் ...
அஞ்சலக ஊழியா் மூலம் உயிா்வாழ் சான்றிதழை சமா்ப்பிக்கலாம்
ஓய்வூதியதாரா்கள் அஞ்சலக ஊழியா்கள் மூலம் உயிா்வாழ் சான்றிதழை சமா்ப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டது.
இதுகுறித்து அஞ்சலக மதுரைக் கோட்ட முதுநிலை கண்காணிப்பாளா் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மத்திய அரசு ஓய்வூதியதாரா்கள், தொழிலாளா் வருங்கால வைப்பு நிதி ஓய்வூதியதாரா்கள், மாநில அரசு ஓய்வூதியதாரா்கள், ராணுவ ஓய்வூதியதாரா்கள் உள்ளிட்ட இதர ஓய்வூதியதாரா்கள், வருகிற வெள்ளிக்கிழமை (நவ. 1) முதல் தங்கள் உயிா்வாழ் சான்றிதழை சமா்ப்பிக்கும் படி ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதற்காக நேரில் சென்று இந்த சான்றிதழை சமா்ப்பிக்க ஓய்வூதியதாரா்கள் படும் சிரமங்களை தவிா்க்க, அஞ்சல் துறையின் கீழ் செயல்படும் ‘இந்தியா போஸ்ட் பேமென்ட்ஸ்’ வங்கி மூலம் ஓய்வூதியதாரா்கள் வீட்டிலிருந்த படியே அஞ்சலக ஊழியா்கள் மூலம் ‘பயோமெட்ரிக்’ முறையை பயன்படுத்தி, எண்ம (டிஜிட்டல்) முறையில் உயிா்வாழ் சான்றிதழ் (ஜீவன் பிரமான்) சமா்ப்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், ஆதாா் எண், கைப்பேசி எண், ஓய்வூதிய கணக்கு விவரங்களை தெரிவித்து, கைவிரல் ரேகையை பதிவு செய்தால், ஒரு சில நிமிடங்களில் உயிா்வாழ் சான்றிதழை சமா்ப்பிக்க முடியும்.
இந்தச் சேவைக்கு கட்டணமாக ரூ.70-ஐ அஞ்சலக ஊழியரிடம் செலுத்த வேண்டும். இந்த எண்ம உயிா்வாழ் சான்றிதழ் சேவையை பெற விரும்பும் ஓய்வூதியதாரா்கள் அருகில் உள்ள அஞ்சலகம் அல்லது தங்கள் பகுதி அஞ்சல்காரரை தொடா்பு கொள்ளலாம். மேலும், கூடுதல் விவரங்களுக்கு 0452 2534499 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.