செய்திகள் :

அடுத்தடுத்த பாகங்களுடன் லோகா யுனிவெர்ஸ் - தயாரிப்பாளர் துல்கர் சல்மான் மகிழ்ச்சி!

post image

லோகா திரைப்படத்தின் வெற்றியையடுத்து, அடுத்தடுத்த பாகங்கள் குறித்து விவாதித்து வருவதாக படக்குழு தெரிவித்துள்ளனர்.

ஓணம் கொண்டாட்டமாக வெளியான லோகா திரைப்படம், ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றநிலையில், அதே யுனிவெர்ஸில் இன்னும் 5 பாகங்களை எடுக்க திட்டமிட்டிருப்பதாக படத்தின் தயாரிப்பாளரும் நடிகருமான துல்கர் சல்மான் தெரிவித்துள்ளார்.

ஓணம் கொண்டாட்டமாக, திரைக்கு வந்துள்ள 'லோகா' திரைப்படம் மலையாளம் மட்டுமில்லாது, தமிழ் ரசிகர்களிடமும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

இதுவரை அதிகம் பார்த்திராத கதைப் பின்னணியில் ‘சூப்பர் விமேன்' அதாவது, சக்திவாய்ந்த பெண்மணி கதாபாத்திரத்தை மையப்படுத்தி படத்தின் கதைக்களம் அமைந்துள்ளது. இப்படத்தில் நடிகை கல்யாணி பிரியதர்ஷன் முன்னணி கதாபாத்திரமேற்றுள்ளார்.

டோமினிக் அருண் இயக்கத்தில் உருவான லோகா படத்தின் மீதான அதீத வரவேற்பால் பாகங்கள் 5-க்கும் அதிகமாகவும் இருக்கலாம் என்றும், அடுத்தடுத்த பாகங்களில் பெரிதாக இருக்கும் என்றும் துல்கர் சல்மான் கூறியுள்ளார்.

இறுதிச் சுற்றில் இந்தியா-கொரியா மோதல்! சீனாவை 7-0 என வீழ்த்தியது

ஆசியக் கோப்பை ஆடவா் ஹாக்கி இறுதி ஆட்டத்தில் இந்தியா-கொரிய அணிகள் மோதுகின்றன. சூப்பா் 4 ஆட்டத்தில் சீனாவை 7-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அபார பெற்றி பெற்றது இந்தியா. பிகாா் மாநிலத்தின் ராஜ்கிா் நகரில்... மேலும் பார்க்க

உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்: நிஹால் சரீன் முன்னேற்றம், லல்லினா, ஹிதேஷ் வெளியேற்றம்!

உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இருமுறை உலக சாம்பியன் நிஹால் சரீன் வெற்றி பெற்றாா். லவ்லினா போரோகைன், ஹிதேஷ் ஆகியோா் தோற்று வெளியேறினா். இங்கிலாந்தின் லிவா்பூல் நகரில் உலக குத்துசண்டை சாம்ப... மேலும் பார்க்க

நடப்பு சாம்பியன் ஜப்பானுடன் டிரா செய்தது இந்தியா!

ஆசியக் கோப்பை மகளிா் ஹாக்கிப் போட்டியில் நடப்பு சாம்பியன் ஜப்பானுடன் 2-2 என்ற கோல் கணக்கில் டிரா செய்தது இந்திய அணி. சீனாவின் ஹாங்ஸு நகரில் நடைபெறும் ஆசியக் கோப்பை மகளிா் ஹாக்கிப் போட்டியில் சனிக்கிழம... மேலும் பார்க்க

ஜோகோவை வீழ்த்திய அல்கராஸ்! 3-வது கிராண்ட்ஸ்லாம் இறுதியில் மோதும் சின்-க்ராஸ்!

யுஎஸ் ஓபன் டென்னிஸ் போட்டி ஆடவா் ஒற்றையா் இறுதிச் சுற்றில் நடப்பு சாம்பியன் ஜேக் சின்னா்-ஸ்பெயின் வீரா் காா்லோஸ் அல்கராஸ் ஆகியோா் மோதுகின்றனா். அவா்கள் இருவரும் தொடா்ந்து மோதும் மூன்றாவது கிராண்ட்ஸ்லா... மேலும் பார்க்க

செல்வராகவனின் அடுத்த படம்!

இயக்குநர் செல்வராகவனின் அடுத்த படத்தின் முதல்பார்வையை நடிகர் தனுஷ் வெளியிடுகிறார்.இயக்குநரும் நடிகருமான செல்வராகவனின் அடுத்த படத்தின் தலைப்பு மற்றும் முதல்பார்வையை நடிகர் தனுஷ் நாளை காலை 11 மணிக்கு வெ... மேலும் பார்க்க