இங்கிலாந்தை வீழ்த்தி இந்தியா த்ரில் வெற்றி; டெஸ்ட் தொடர் சமன்!
அடுத்த 20 ஆண்டுகளுக்கு படம் இயக்கவுள்ள இயக்குநர் பற்றி தெரியுமா?
ஹொம்பாலே ஃபிலிம்ஸ் தயாரிக்கும் புதிய திரைப்படத் தொடரின் தகவல் பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.
விஷ்ணுவின் தசாவதாரங்களில் (பத்து அவதாரங்கள்) ஒன்றான நரசிம்ம அவதாரத்தை மையமாக வைத்து கடந்த ஜூன் 25 ஆம் தேதி திரைக்கு வந்த மஹா அவதார் நரசிம்மா என்கிற அனிமேஷன் திரைப்படம் குழந்தைகள் மற்றும் பெரியவர்களிடம் வரவேற்பைப் பெற்று ரூ. 100 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளது. படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைத்திருந்தார்.
மேலும், இந்த வார இறுதிக்குள் இன்னும் 50 கோடியை அதிகம் வசூலிக்கலாம் எனத் தெரிகிறது.
இப்படத்திற்குக் கிடைத்த வரவேற்பால், மீதமுள்ள 9 அவதாரங்களையும் திரைப்படமாக எடுக்கத் ஹொம்பாலே நிறுவனம் முடிவு செய்துள்ளதாம்.
மஹா அவதார் நரசிம்மா படத்தின் இயக்குநர் அஷ்வின் குமார் மீதமுள்ள அவதாரங்களையும் இயக்க உள்ளாராம். இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒவ்வொரு திரைப்படமாக வெளியிடத் திட்டமிட்டுள்ளதால் அடுத்த 20 ஆண்டுகள் வரை ஒரு இயக்குநர் பிசியாக இருக்கப்போகிறார்!
இதையும் படிக்க: அம்பிகாவதியின் ஆன்மா சிதைந்துவிட்டது: தனுஷ்