பஹல்காம் தாக்குதல்: காஷ்மீரில் 14 பேர் பயங்கரவாதிகளுக்கு ஆதரவு! என்ஐஏ
அடுத்த 3 மணி நேரத்துக்கு எந்தெந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு?
தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்துக்கு 16 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
அதன்படி இன்று(திங்கள்கிழமை) இரவு 7 மணி வரை கடலூர், பெரம்பலூர், அரியலூர், மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சாவூர், கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் லேசான இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழையும்
கள்ளக்குறிச்சி, சேலம், விருதுநகர், தேனி, திண்டுக்கல், திருச்சி, சிவகங்கை, நாகப்பட்டினம், திருநெல்வேலி ஆகிய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் லேசான இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | திருப்பதி அருகே லாரி - கார் மோதியதில் 5 பேர் பலி! ஒசூரைச் சேர்ந்தவர்கள் எனத் தகவல்!!