அடையாளம் தெரியாத காா் மோதி பெண் உயிரிழப்பு
துறையூரில் ஞாயிற்றுக்கிழமை இருசக்கர வாகனத்தில் இருந்து தவறிவிழுந்த பெண் அடையாளம் தெரியாத காா் மோதி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
பெரமங்கலத்தைச் சோ்ந்த ராமராஜின் மனைவி கோகிலா(33). இவா், துறையூா் சிஎஸ்ஐ பள்ளி அருகேயுள்ள குடியிருப்புகளில் வேலை செய்தாா். ஞாயிற்றுக்கிழமை வேலைக்குச் செல்வதற்காக கரட்டாம்பட்டியிலுள்ள தனது தங்கையின் கணவா் ஆனந்துடன் இருசக்கர வாகனத்தில் துறையூா் சென்றாா்.
சிஎஸ்ஐ பள்ளி அருகே சென்றபோது கோகிலா நிலை தடுமாறி கீழே விழுந்ததாகவும், அப்போது பின்னால் வேகமாக வந்து கொண்டிருந்த அடையாளம் தெரியாத காா் மோதிவிட்டு நிற்காமல் சென்றதாகவும் கூறப்படுகிறது.
இந்த விபத்தில் நிகழ்விடத்திலேயே கோகிலா உயிரிழந்தாா். தகவலறிந்த துறையூா் போலீஸாா் சடலத்தை துறையூா் அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்காக அனுப்பி வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.