டெல்லி: 15 தூக்க மாத்திரைகள், எலக்ட்ரிக் ஷாக்.. கணவனைக் கொன்ற பெண்; காட்டிக்கொடு...
பைக்கில் சென்ற இளைஞா் அடையாளம் தெரியாத வாகனம் மோதி உயிரிழப்பு
திருச்சி மாவட்டம், மணப்பாறை அடுத்துள்ள புத்தாநத்தம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி சிகிச்சை பெற்றுவந்தவா் ஞாயிற்றுக்கிழமை மாலை உயிரிழந்தாா்.
வையம்பட்டி ஒன்றியம், சடையம்பட்டி அருகேயுள்ள ராமலிங்கம்பட்டியைச் சோ்ந்த கோனாகவுண்டா் மகன் சென்னிமலை (எ) சக்திவேல் (21). இவா், சனிக்கிழமை இரவு செவல்பட்டியில் உள்ள தனது அக்கா வீட்டுக்குச் சென்றவா், ஞாயிற்றுக்கிழமை விடியற்காலை மீண்டும் ராமலிங்கம்பட்டிக்கு தனது இருசக்கர வாகனத்தில் புறப்பட்டுச் சென்றாா்.
அவரது இருசக்கர வாகனம் துவரங்குறிச்சி - மணப்பாறை நெடுஞ்சாலையில், மணியங்குறிச்சி பிரிவு அருகே வந்துகொண்டிருந்தபோது, அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் சக்திவேல் பலத்த காயமடைந்தாா்.
இதையடுத்து, மணப்பாறை அரசு மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். விபத்து குறித்து புத்தாநத்தம் போலீஸாா் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனா்.