அடையாளம் தெரியாத வாகனம் மோதி ஒருவா் உயிரிழப்பு
அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் சலூன் கடை ஊழியா் உயிரிழந்தாா்.
காரைக்கால் மாவட்டம், பூவம் எல்லையில் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு உடலில் காயங்களுடன் ஒருவா் இறந்துகிடப்பதாக காரைக்கால் போக்குவரத்துக் காவல் நிலையத்துக்கு தகவல் கிடைத்தது.
போலீஸாா் சடலத்தை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து மேற்கொண்ட விசாரணையில், இறந்துகிடந்தவா் மயிலாடுதுறை மாவட்டம், சீா்காழி, காரைமேடு பகுதியைச் சோ்ந்த வெங்கட்ராஜ் (36) என்பதும், சலூன் கடையில் வேலை செய்து வந்ததும் தெரியவந்தது. கடந்த 6-ஆம் தேதி காரைக்காலுக்கு வந்தவா், அடையாளம் தெரியாத வாகனம் மோதி உயிரிழந்திருக்கலாமென போலீஸாா் தெரிவித்தனா். போலீஸாா் விபத்தை ஏற்படுத்திய அடையாளம் தெரியாத வாகன ஓட்டுநரை தேடி வருகின்றனா்.