செய்திகள் :

`அண்ணாமலை அல்ல, அவரின் தாத்தாவே வந்தாலும்..! ; எங்களால்தான் பி.கே-வுக்கு வெற்றி’ - அமைச்சர் ரகுபதி

post image

`செங்கல்லை அல்ல சிறுபுல்லைக் கூட...’

புதுக்கோட்டை மாநகராட்சிக்கு உட்பட்ட கீழ மூன்றாம் வீதியில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள சிறுபான்மையினர் நல கல்லூரி மாணவர் விடுதியினை தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் மெய்யநாதன் ஆகியோர் திறந்து வைத்தனர். இதன் பின்னர், செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி,

“அண்ணா அறிவாலைய செங்கல்லை அகற்றுவேன் என்று அண்ணாமலையின் பேச்சு பார்க்கையில், இதைப்போல முட்டாள்தனமான பேச்சு வேறு இருக்க முடியாது. எங்களைத் தொடக்கூட முடியாது. அண்ணா அறிவாலயத்தில் நுழைய கூட முடியாது. அண்ணா அறிவாலயம் சட்டப்படி முறைப்படி நன்றாக கட்டப்பட்டுள்ளது. அனுமதி பெற்று கட்டப்பட்டுள்ளது. அண்ணாமலை அல்ல. அவரது தாத்தாவே வந்தாலும் ஒன்றும் செய்ய முடியாது. இது, அவருக்கும் நன்றாக தெரியும். அங்குள்ள செங்கல்லை அல்ல சிறுபுல்லைக் கூட புடுங்குவதற்கு வாய்ப்பு கிடையாது. நாங்கள் அனுமதித்தால் தான் அவர் உள்ளே வர முடியும்.

அண்ணாமலை
அண்ணாமலை

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்க்கு Y பிரிவு பாதுகாப்பு வழங்கியதில் மாநில அரசை ஒன்றிய அரசு ஆலோசனை செய்ய வேண்டும் என்று அவசியம் கிடையாது. இது, சோதனைக்காகவா... அங்கு யார் யார் வருகிறார்கள் என்று பார்ப்பதற்காகவா அல்லது அந்த மீனை தங்களுடைய வலையில் சிக்க வைப்பதற்காகவா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

`அ.தி.மு.க தொண்டன் முதல் முறையாக உதயசூரியனுக்கு வாக்களித்துள்ளான்’

அ.தி.மு.க-வில் உள்ள தொண்டர்கள் இரட்டை இலை சின்னத்தை தவிர வேறு எந்த சின்னத்திற்கும் வாக்களிக்க மாட்டான். ஆனால், தற்பொழுது நடந்து முடிந்தது ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க தொண்டன் முதல் முறையாக உதயசூரியனுக்கு வாக்களித்துள்ளான். அ.தி.மு.க தொண்டரிடம் மனமாற்றம் வந்துள்ளது. அந்த மனமாற்றத்தை நாங்கள் வரவேற்கின்றோம். அ.தி.மு.க தொண்டர்கள் அவர்களது தலைமை சரியில்லை என்பதை உணர தொடங்கிவிட்டனர். நாம் தமிழர் கட்சியினர் தனியாகத்தான் தேர்தலை சந்திக்கப் போகிறேன் என்று கூறுகிறார்கள். வருகின்ற சட்டமன்ற தேர்தலில் தனியாக அவர்கள் தேர்தலை சந்தித்து 234 தொகுதியிலும் டெபாசிட் இழந்த கட்சியாக நாம் தமிழர் கட்சி இருக்கும்.

ஜெயலலிதா

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நகைகளையும், அவரின் பேரில் உள்ள சொத்துக்களையும் முறைப்படி தமிழ்நாடு அரசுக்கு ஒப்படைத்துள்ளது. இதற்கு அடுத்த கட்ட நடவடிக்கையாக அரசின் பதிலையும், நீதிமன்ற உத்தரவையும் பொறுத்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

மயிலாடுதுறை கொலை சம்பவத்தில் யார் உண்மையான குற்றவாளியோ அவர்களை பிடித்து நாங்கள் கைது செய்கின்றோம். எந்த சூழ்நிலையிலும் தவறான நபர்கள் கைது செய்துவிடக்கூடாது என்பதுதான் தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவு. அண்ணாமலை சொல்வதற்கெல்லாம் நாங்கள் ஆட முடியாது. ஒரு சம்பவம் நடப்பது என்பது இயற்கை. அதனை நாங்கள் தடுக்க முடியாது. ஆனால், ஒரு சம்பவம் நடந்த பிறகு அந்த குற்றச் செயலில் ஈடுபடுபவர்களை நாங்கள் கண்டுபிடிக்கிறோமா இல்லையா என்பது தான் முக்கியம். இந்த சம்பவத்தில் குற்றவாளிகளை உடனடியாக கண்டுபிடித்துள்ளோம். இதன் பிறகு, நீதிமன்றத்தில் அவர்கள் மீது சுமத்தப்பட்ட குற்றத்தை நாங்கள் நிரூபிப்போம். மக்களின் பார்வை எப்படி இருக்கிறது என்று எங்களுக்கு தெரியாது. ஆனால், எங்களின் பார்வை மக்கள் மீது இருக்கிறது. மக்களுக்காக இருக்கிறது.

இன்று இந்தியா கூட்டணிக்கு என்று தமிழ்நாட்டில் 52 சதவீதம் வாக்கு வங்கி இருப்பதாக கருத்துக்கணிப்பு கூறியுள்ளது. அ.தி.மு.க-வுக்கு 20 சதவீதம் வாக்கு வங்கி தான் உள்ளது என்றும் நிரூபிக்கப்பட்டுள்ளது. இதுதானே தவிர வேறொன்றும் கிடையாது. இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையமே விசாரிக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவு கொடுத்திருப்பதன் மூலமாக அ.தி.மு.க சிக்கலில் மாட்டிக்கொண்டிருக்கிறது என்பது உண்மை. தி.மு.க களத்தில் வலுவாக இருக்கக்கூடிய கட்சி. எங்களது கட்டமைப்பை போல இந்தியாவில் உள்ள எந்த கட்சிக்கும் கட்டமைப்பு கிடையாது. எங்களால்தான் பிரசாந்த் கிஷோர் வெற்றி பெற்றார். நாங்கள் தான் வெற்றி பெற்றுள்ளோம். அவர் எங்களுக்கு வியூக வகுப்பாளராக இருந்திருக்கிறாரே தவிர எங்களுடைய களப்பணி தான் வெற்றி பெற்றுள்ளது. இதுவே, அவர் பா.ஜ.க-வுக்கு சென்று பணியாற்ற முடியாது. வேறு எந்த கட்சிக்கும் சென்றும் பணியாற்றி வெற்றியை காட்ட முடியாது. தி.மு.க கட்டமைப்பு வலுவான ஒன்று. இந்தியாவிலேயே வலுவாக இருக்கக்கூடிய ஒரே இயக்கம் தி.மு.க தான்.

பிரஷாந்த் கிஷோர்

விஜய் கட்சிக்கு 15 முதல் 20 சதவீதம் வாக்கு வங்கி இருப்பதாக எந்த வகையில் கூறுகிறார் என்பது பிரசாந்த் கிஷோருக்கு தான் தெரியும். சர்வேயில் 52 சதவீதம் எங்களுக்கு கொடுத்த பிறகு அங்கு இருக்கக்கூடிய மிச்சம் மீதி எல்லாம் பார்த்தால் 9 சதவீதம் மட்டும் தான் வருகிறது. அதில் இருக்கும் 9 சதவீதத்தில் நாம் தமிழருக்கு எவ்வளவு சதவீதம் கொடுக்கப் போகிறார்கள்.? மற்றவர்களுக்கு என்ன கொடுக்கப் போகிறார்கள்?. எல்லாவற்றையும் பார்த்தோமேயானால் மிஞ்சுவது அஞ்சு சதவீதத்திலிருந்து ஏழு சதவீதம் மிஞ்சினால் பெரிது. நாடாளுமன்றத் தேர்தல் வாக்கு சதவீதத்திற்கும், சட்டமன்றத் தேர்தல் வாக்கு சதவீதத்திற்கும் மிகப்பெரிய வித்தியாசம் என்பது ஏற்படாது. எங்களுடைய 52 சதவீத வாக்கு வங்கி அப்படியே இருக்கும் வேண்டுமென்றால் பா.ஜ..க கூட்டணியுடைய வாக்குகள் வேற கூட்டணிக்கு செல்லுமே தவிர எங்களுடைய வாக்கு வங்கி வேறு எந்த கட்சிக்கும் போவதற்கான வாய்ப்பு இல்லை.

ஏனென்றால், தமிழ்நாடு முதலமைச்சர் மக்கள் நலத் திட்டங்களை முன்னெடுத்துச் சென்று இருக்கிறார். இது போன்ற புரட்சிகரமான திட்டங்கள் இந்தியாவிலேயே வேறு எந்த மாநிலத்திலும் செயல்படுத்தியது இல்லை. அத்தனை திட்டங்களும் முன்னோடி திட்டங்கள். மக்களுக்கான திட்டங்கள். அதை முதன் முதலாக நிறைவேற்றி இருக்கும் அரசு தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையிலான அரசு. பெண்களைப் பின் தொடர்ந்து சென்றாலே மூன்றிலிருந்து ஐந்து வருடம் தண்டனை என்று சட்டத்தை போட்டு இருக்கக்கூடிய ஆட்சிதான் தி.மு.க-வின் ஆட்சி. இன்றைக்கு இந்த ஆட்சியில் அதிகமான பாதுகாப்பு இருக்கின்ற காரணத்தினால் தான் பெண்கள் தைரியமாக புகார் கொடுக்க முன் வருகிறார்கள்.

minister ragupathi

கடந்த ஆட்சியில் தங்களுக்கு ஒரு பாதிப்பு என்றாலும் வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடந்தார்கள். பெண்களுக்கு உரிய பாதுகாப்பு நம்பிக்கையை நாங்கள் கொடுத்து இருக்கின்றோம். பெண்கள் தைரியமாக வந்து புகார் கொடுப்பதால் தான் அந்த புகாரின் கீழ் நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது. ஒரு ஆசிரியர் தவறு செய்தால் அந்த ஆசிரியர் எப்படி மாணவர்களுக்கு ஆசிரியராக தொடர முடியும்?. அதனால், தவறு செய்யும் ஆசிரியரின் கல்விச் சான்றுகளை ரத்து செய்வதாக தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை அமைச்சர் கூறியதில் எந்த தவறும் இருப்பதாக தெரியவில்லை. வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க-விற்கு வாக்கு சதவீதம் வருகிறதா என்று பார்ப்போம். அவர்களுக்கு தற்போது கொடுத்திருக்கும் வாக்கு சதவீதத்தை குறைப்பதற்கான நடவடிக்கையில் தான் நாங்கள் ஈடுபடுவோம்.

சாதிவாரி கணக்கெடுப்பு

சாதிவாரி கணக்கெடுப்புக்கு ஒரு தெளிவான பதிலை நாங்கள் கூறிவிட்டோம். மக்கள் தொகை கணக்கெடுப்பு என்பது ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள ஒன்று. மக்கள்தொகை கணக்கெடுப்பின் விவரங்களை சேகரித்தால்தான் சாதிவாரி கணக்கெடுப்பை மேற்கொள்ள முடியும். மக்கள்தொகை கணக்கெடுப்பை எடுக்காத போது மாநில அரசு எடுக்கும் சாதிவாரி கணக்கெடுப்புக்கு அங்கீகாரம் கிடைக்காது. நீதிமன்றத்திற்கு செல்கின்ற போது அது அடிபட்டு போகும். அதனால் தான் ஒன்றிய அரசை நாங்கள் மக்கள்தொகை கணக்கெடுப்போடு சாதி வாரி கணக்கெடுப்பையும் எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். ஒன்றிய அரசு எடுக்க வேண்டியதுதானே?. அனைவரும் ஒன்றிய அரசை வற்புறுத்த வேண்டியதானே?. ஆனால், மாநில அரசை ஏன் வற்புறுத்திக் கொண்டே இருக்கிறார்கள்?.

சில மாநிலங்களில் சாதிவாரி கணக்கெடுப்பு எடுத்து இருந்தாலும் அது நடைமுறைக்கு வரவில்லை. எடுத்து வைத்துக் கொள்வதில் என்ன பிரயோஜனம். ஓ.பி.எஸ் மகன் கூறுவதை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். இந்தியாவில் நம்பர் ஒன் கட்சியாக தி.மு.க தான் உள்ளது. செங்கோட்டையன் தனது சொந்த கருத்தைதான் சொல்லி இருக்கிறாரே தவிர, தி.மு.க இதில் எந்த ப்ளேயும் பண்ண வேண்டிய அவசியம் கிடையாது. ஏற்கனவே, அ.தி.மு.க-வின் கதை அங்கு முடிந்து விட்டது. நாங்கள் எந்தவித குட்டி கலாட்டாவும் பண்ண வேண்டிய அவசியம் கிடையாது. தி.மு.க கூட்டணிக்குள் குழப்பத்தை ஏற்படுத்த முடியாது. வேல்முருகனுக்கு சட்டமன்ற உறுப்பினராகும் வாய்ப்பை உருவாக்கி தந்தவர் தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின். அவர் கூறும் கோரிக்கைகளுக்கெல்லாம் செவி கொடுத்து அதனை நிறைவேற்றி வருகின்றார். அதனால், தமிழ்நாடு முதலமைச்சருக்கு எதிராக எந்தவித கோலும் அடிக்க மாட்டார் என்று நாங்கள் நம்புகிறோம்” என்றார்.

Vikatan Play

இப்போது ஆடியோ வடிவிலும் வந்துவிட்டான் `பறம்பின் நாயகன்' பாரி; அறமும் வீரமும் நிறைந்த அவனின் கதையைக் கேட்டு மகிழுங்கள்! 

https://tinyurl.com/Velpari-Vikatan-Play

CEC : அவசரமாக தேர்ந்தெடுக்கப்பட்ட தலைமை தேர்தல் ஆணையர் - பின்னணி? | Vikatan | Imperfect Show

இன்றைய இம்பர்ஃபெக்ட் ஷோ ஃவில்,* விகடன் இணையதளம் முடக்கம்: சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் நடந்த ஆர்ப்பாட்டம்!* விகடன் இணையதளம் முடக்கம்: ``பாஜகவிற்கு எதிராக பெரு மூச்சு விடுவதையும் கூட...'' - இரா. மு... மேலும் பார்க்க

"தமிழ்நாடு இன்னொரு மொழிப்போரைச் சந்திக்கவும் தயங்காது..." - உதயநிதி எச்சரிக்கை!

மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், 'தமிழ்நாடு அரசு புதிய கல்விக் கொள்கையை ஏற்க மறுக்கிறது.மும்மொழிக் கொள்கையை ஏற்றால்தான் நிதி தருவோம்' என்று பேசியது சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது.மத்திய... மேலும் பார்க்க

`கேலிச்சித்திரத்துக்கு எதிரான அதிகார பிரயோகம் நகைச்சுவையாக மாறிவிடும்'- கார்ட்டூனிஸ்ட் பாலா

விகடனின் இணைய இதழான விகடன் ப்ளஸ்ஸில் வெளியான கார்ட்டூன் சம்பந்தமாக தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கொடுத்த புகாரின் பேரில், எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் விகடனின் இணையதளம் சில நாள்களுக்கு முன்பு முடக்கப்... மேலும் பார்க்க

'ஒவ்வொரு தனிமனிதனின் சுதந்திரத்துக்கும் எதிரான தாக்குதல்!' - விகடன் குழும ஆசிரியர் அறிவழகன்

விகடனின் இணைய இதழான விகடன் ப்ளஸ்ஸில் வெளியான கார்ட்டூன் சம்பந்தமாக தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கொடுத்த புகாரின் பேரில், எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் விகடனின் இணையதளம் சில நாள்களுக்கு முன்பு முடக்கப்... மேலும் பார்க்க