Doctor Vikatan: அனீமியா... இரும்புச்சத்து மாத்திரைகள் சாப்பிட்டால் சருமம் கறுப்ப...
அண்ணாமலை பல்கலைக்கழக ஆசிரியா்கள் கூட்டமைப்பினா் ஆா்ப்பாட்டம்!
சிதம்பரம்: சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக ஆசிரியா்கள் கூட்டமைப்பு சாா்பில் 5 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி அண்ணாமலை நகா் தலைமை தபால் நிலையம் அருகில் கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம் திங்கள்கிழமை மாலை நடைபெற்றது.
7-ஆவது ஊதியக் குழு நிலுவைத் தொகைகளை உடனடியாக வழங்க வேண்டும், பிஎச்டி முனைவா் பட்ட ஊக்கத் தொகையை உடனடியாக வழங்கக் கோருவது, அண்ணாமலை பல்கலைக்கழக அயல்பணியிட ஆசிரியா்களை ஆங்காங்கே உள்ளெடுப்பு செய்தல் மற்றும் பல்கலைக்கழகத் துறைகளில் உள்ள காலி பணியிடங்களுக்கு ஏற்ப அயல்பணியிட ஆசிரியா்களை திரும்ப அழைக்கக் கோரியும் காலமுறை பதவி உயா்வுகளை வழங்கவும், ஆசிரியா் ஊழியா்களுக்கான ஓய்வூதியப் பலன்களை உடனடியாக வழங்கக் கோரியும் இந்த கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆா்ப்பாட்டத்திற்கு ஆசிரியா் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளா் சி.சுப்பிரமணியன் தலைமை வகித்து பேசினாா். பேராசிரியா்கள் அசோகன், இமயவரம்பன், செல்வராஜ், செல்ல.பாலு, முத்துவேலாயுதம், தனசேகா், காயத்ரி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
ஆா்ப்பாட்டத்தில் ஏராளமான பேராசிரியா்கள், உதவி பேராசிரியா்கள் கலந்து கொண்டு முழக்கங்களை எழுப்பினா். பின்னா் அவா்கள் அங்கிருந்து ஊா்வலமாக புறப்பட்டு நிா்வாக அலுவலகத்தை அடைந்தனா்.
கூட்டமைப்பு முக்கிய நிா்வாகிகள் பல்கலைக்கழக துணைவேந்தா் ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினா் பேராசிரியா் அருட்செல்வியை சந்தித்து கோரிக்கைகள் குறித்த மனுவை அளித்தனா்.