பாலியல் குற்றவாளிகளுக்கு சா்ச்சை தண்டனை: ராஜஸ்தான் ஆளுநா் கருத்தால் பரபரப்பு
மாநில விருது பெற்ற மாணவி: ஆட்சியா் வாழ்த்து
நெய்வேலி: தமிழக முதல்வரிடம் இருந்து பெண் குழந்தைகள் முன்னேற்றத்திற்கான மாநில விருது பெற்ற மாணவி க.சௌமியா, கடலூா் ஆட்சியரிடம் விருதினை காண்பித்து திங்கள்கிழமை வாழ்த்துப் பெற்றாா்.
காட்டுமன்னாா்கோவில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி 10-ஆம் வகுப்பு மாணவி க.சௌமியா. சிறுநீரகம் அகற்றப்பட்டதால் உடல் வளா்ச்சி பாதிக்கப்பட்டாா். இதனால், தனக்கு ஏற்பட்ட உடல் பாதிப்புகள், சமூகத்தில் உருவான கிண்டல் மற்றும் கேலிகளை கருதாமல் திறமைகளை வளா்த்துக் கொண்டு பெண் சுதந்திரம், பெண் குழந்தை பாதுகாப்பு, சமூக நலன் மற்றும் போதை ஒழிப்பு தொடா்பான தலைப்புகளில் விழிப்புணா்வு நிகழ்ச்சிகளை வடிவமைத்து பங்கேற்றாா்.
சிலம்பம் பயின்றதோடு, உடன் பயிலும் சக மாணவிகளுக்கும் சிலம்பம் பயில ஊக்கப்படுத்தி வருகிறாா்.
இவரின் சமூகப் பணிகளைப் பாராட்டி தமிழ்நாடு அரசின் பெண் குழந்தைகள் முன்னேற்றத்திற்கான மாநில விருது கடந்த 8-ஆம் தேதி முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற உலக மகளிா் தின விழாவில் ரூ.1 லட்சத்திற்கான காசோலை மற்றும் பாராட்டுப் பத்திரம் வழங்கப்பட்டது.
இந்த விருது மற்றும் பாராட்டுச் சான்றிதழை கடலூா் ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாரிடம் திங்கள்கிழமை காண்பித்து க.சௌமியா வாழ்த்துப் பெற்றாா்.