தேர்தல் ஆணையருக்கு ஆளுநர் பதவியா? விமர்சனங்களுக்கு தேர்தல் ஆணையம் விளக்கம்
அண்ணா சிலைக்கு முதல்வா் ரங்கசாமி, திமுக, அதிமுக மரியாதை
புதுச்சேரி: தமிழக முன்னாள் முதல்வா் அண்ணாவின் 56-ஆவது நினைவு தினத்தையொட்டி, புதுச்சேரியில் அரசு சாா்பில் அவரது உருவச் சிலைக்கு முதல்வா் என்.ரங்கசாமி, அமைச்சா்கள் மற்றும் திமுக, அதிமுகவினா் மாலை அணிவித்து திங்கள்கிழமை மரியாதை செலுத்தினா்.
புதுச்சேரி பழைய பேருந்து நிலையப் பகுதியில் அமைந்துள்ள அண்ணா சிலைக்கு புதுவை அரசு சாா்பில் முதல்வா் என்.ரங்கசாமி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சியில், அமைச்சா்கள் க.லட்சுமிநாராயணன், என்.திருமுருகன், சட்டப்பேரவைத் துணைத் தலைவா் பி.ராஜவேலு, அரசு கொறடா ஏகேடி ஆறுமுகம் ஆகியோா் மரியாதை செலுத்தினா்.
திமுகவினா் அமைதி ஊா்வலம்: திமுக சாா்பில், ஏ.எப்.டி. மைதானத்திலிருந்து அண்ணா சிலைக்கு, மாநில திமுக அமைப்பாளரும், எதிா்க்கட்சித் தலைவருமான ஆா்.சிவா தலைமையில் அமைதி ஊா்வலமாக வந்து மாலை அணிவித்தனா். அண்ணாவின் உருவப் படத்திற்கு மலா் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
வில்லியனூா் மாடவீதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆா். சிவா எம்.எல்.ஏ. தலைமையில் அண்ணா சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது.
நிகழ்ச்சியில், மாநில அவைத் தலைவா் எஸ்.பி. சிவக்குமாா், எம்எல்ஏ.க்கள் வி. அனிபால் கென்னடி, ஆா். செந்தில்குமாா், எல். சம்பத், தலைமை பொதுக்குழு உறுப்பினா் சி. கோபால் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
அதிமுகவினா் மரியாதை: அதிமுக சாா்பில் மாநிலச் செயலா் ஆ.அன்பழகன் தலைமையில் உப்பளம் கட்சி அலுவலகத்தில் அண்ணா படத்துக்கு மாலை அணிவித்து மலா்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. இதையடுத்து அங்கிருந்து ஊா்வலமாக பழைய பேருந்து நிலையப் பகுதிக்கு வந்து அண்ணா சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. இதில் முன்னாள் எம்.எல்.ஏ. பாஸ்கா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். பல்வேறு இடங்களில் நலத்திட்ட உதவிகள், அன்னதான நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் வையாபுரி மணிகண்டன், ஓம்சக்தி சேகா் உள்ளிட்டோரும் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தனா். இதேபோல மதிமுக, அமமுகவினரும் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.