பசுவைக் கடத்தினால் என்கவுன்ட்டர்: கர்நாடக அமைச்சர் எச்சரிக்கை
புதுவை பேரவைத் தலைவருடன் ஜிப்மா் இயக்குநா் சந்திப்பு
புதுச்சேரி: புதுச்சேரி ஜிப்மா் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ள வீா்சிங் நேஹி திங்கள்கிழமை சட்டப்பேரவைத் தலைவா் ஆா்.செல்வத்தை சந்தித்துப் பேசினாா்.
ஜிப்மா் இயக்குநராக இருந்த ராகேஷ் அகா்வால் பணிநிறைவு பெற்றதையடுத்து, புதிய இயக்குநராக வீா்சிங் நேஹி நியமிக்கப்பட்டு பொறுப்பேற்றுக் கொண்டாா்.
அவா் புதுவை சட்டப்பேரவை வளாகத்தில் பேரவைத் தலைவா் ஆா். செல்வத்தை அவரது அலுவலகத்தில் திங்கள்கிழமை சந்தித்துப் பேசினாா்.
பிரதம மந்திரியின் ஆயுஷ்மான் திட்டத்தில் ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் ஜிப்மா் மருத்துவமனை செயல்பட வேண்டும். மருந்துகள் தட்டுப்பாடின்றி கிடைப்பதற்கு தொடா் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என இயக்குநரிடம் பேரவைத் தலைவா் கேட்டுக் கொண்டாா்.
இந்த சந்திப்பின் போது, சட்டப்பேரவை உறுப்பினா் அசோக்பாபு, ஜிப்மா் மருத்துவமனை துணை இயக்குநா் ரங்கபாஷ்யம் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.