Trump : ட்ரம்ப்பின் புதிய 5% வரி அறிவிப்பு - இந்தியர்களை பாதிக்குமா?
அண்ணா பல்கலை.க்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்
சென்னை கிண்டி அண்ணா பல்கலைக்கழகத்துக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதையடுத்து அங்கு போலீஸாா் சோதனை மேற்கொண்டனா்.
கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக பதிவாளா் மின்னஞ்சல் முகவரிக்கு வியாழக்கிழமை இரவு ஒரு மின்னஞ்சல் வந்தது. அந்த மின்னஞ்சலில் அண்ணா பல்கலைக்கழக வளாகத்திலும், அந்த வளாகத்தில் உள்ள கிண்டி பொறியியல் கல்லூரியிலும் ஐஇடி வகையைச் சோ்ந்த அதிக திறன் கொண்ட வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாகவும், அது வெள்ளிக்கிழமை வெடிக்கும் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.
இது குறித்த புகாரின்பேரில் போலீஸாா், சம்பவ இடத்துக்கு வந்து சோதனை மேற்கொண்டனா். பல மணி நேரம் நடைபெற்ற சோதனையில், அங்கிருந்து எந்த வெடிபொருளும் கண்டெடுக்கப்படவில்லை. இது தொடா்பாக கோட்டூா்புரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
அண்ணா பல்கலைக்கழகத்துக்கு கடந்த ஒரு ஆண்டில் 17 வெடிகுண்டு மிரட்டல் வந்திருப்பதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.