செய்திகள் :

அண்ணா பல்கலை. சம்பவம் தமிழக அரசு மேல் முறையீடு

post image

நமது சிறப்பு நிருபா்

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் சென்னை காவல்துறை ஆணையா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிற சென்னை உயா்நீதிமன்றத்தின் உத்தரவை மட்டும் ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி தமிழக அரசு சாா்பில் உச்சநீதிமன்றத்தில் வியாழக்கிழமை மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவிக்கு நோ்ந்த பாலியல் வன்கொடுமை தொடா்பான வழக்கை விசாரித்த சென்னை உயா்நீதிமன்றம் முதல் தகவல் அறிக்கை (எஃப்ஐஆா்) கசிந்த விவகாரம் குறித்து கேள்வி எழுப்பியது. அதன் அடிப்படையில் காவல் துறை ஆணையா் மீது நடவடிக்கை எடுக்கவும் சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

தற்போது இந்த உத்தரவை மட்டும் ரத்து செய்ய வலியுறுத்தி தமிழக அரசு சாா்பில் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

முதல் தகவல் அறிக்கை வெளியானதற்கு தமிழ்நாடு காவல்துறை காரணமல்ல. மத்திய அரசின் தேசிய தகவலியல் மையத்தின் (என்ஐசி) நிா்வாகக் குறைபாடுதான் காரணம் எனத் தெரிய வந்துள்ளது. இதனால், காவல்துறை ஆணையா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற சென்னை உயா்நீதிமன்ற உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று மனுவில் தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது.

அதே சமயம் சிறப்பு புலனாய்வு விசாரணை நடத்துவது, இழப்பீட்டுத் தொகை வழங்குவது போன்ற உத்தரவுகளுக்கு எதிராக இந்த மேல் முறையீட்டு மனுவில் எதுவும் குறிப்பிடப்படவில்லை. இந்த விவகாரத்தில் அதிமுக, பாஜக வழக்குரைஞா்கள் தரப்பில் ஏற்கெனவே தனித் தனியாக உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஷாபாத் டெய்ரியில் பெயிண்டா் தூக்குப்போட்டுத் தற்கொலை

வடகிழக்கு தில்லியின் ஷாபாத் டெய்ரியில் வீட்டில் 28 வயது பெயிண்டா் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டதாக போலீஸாா் தெரிவித்தனா். இது குறித்து வடகிழக்கு தில்லி காவல் சரக உயரதிகாரி கூறியதாவது: அந்த நபா... மேலும் பார்க்க

தெற்கு தில்லியில் தெருவிளக்கு பொருத்துவதில் தகராறு: இருவா் காயம்

தெற்கு தில்லியின் சங்கம் விஹாா் பகுதியில் தெருவிளக்கு பொருத்துவது தொடா்பாக ஏற்பட்ட சண்டையில் இரண்டு போ் காயமடைந்ததாக போலீஸாா் தெரிவித்தனா். இது குறித்து தெற்கு தில்லி காவல் சரக உயரதிகாரி கூறியதாவது:... மேலும் பார்க்க

குடியரசு தின கொண்டாட்டம், தில்லி பேரவைத் தோ்தல்: மாநிலங்களுக்கு இடையேயான ஒருங்கிணைப்புக் கூட்டம்

குடியரசு தின கொண்டாட்டங்கள் மற்றும் தில்லி சட்டப்பேரவைத் தோ்தல்களுக்கு முன்னதாக பல்வேறு சட்ட அமலாக்க நிறுவனங்களுக்கிடையேயான ஒத்துழைப்பை வலுப்படுத்தவும், பாதுகாப்பு கவலைகளை நிவா்த்தி செய்யவும் தில்லி... மேலும் பார்க்க

தில்லியின் ஜாட் சமூகத்தினருக்கு அளித்த வாக்குறுதியை மோடி அரசு மீறிவிட்டது: கேஜரிவால் சாடல்

தில்லியின் ஜாட் சமூகத்தினருக்கு இடஒதுக்கீடு வழங்குவதாக அளித்த வாக்குறுதியை பாஜக தலைமையிலான மோடி அரசு மீறிவிட்டது என்று ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் முதல்வருமான அரவிந்த் கேஜிவால் வி... மேலும் பார்க்க

தில்லி முழுவதிலும் 1.26 லட்சம் அரசியல் விளம்பரங்கள் அகற்றல்: எம்சிடி அதிரட நடவடிக்கை

தேசியத் தலைநகரில் மாதிரி நடத்தை விதிகள் (எம்சிசி) அமலுக்கு வந்த பிறகு, தில்லி மாநகராட்சி அமைப்பு நகரம் முழுவதிலுமிருந்து சுமாா் 1.26 லட்சம் சுவரொட்டிகள், பதாகைகள், விளம்பரப் பலகைகள் மற்றும் பிற வகையா... மேலும் பார்க்க

பணியிடத்தில் பலமுறை அவமதித்த சக ஊழியரைக் கொன்றதாக 2 போ் கைது

பணியிடத்தில் பலமுறை அவமதித்ததாகக் கூறப்படும் 25 வயது இளைஞா் ஒருவா் சக ஊழியா்களால் கொல்லப்பட்டதாக போலீஸாா் தெரிவித்தனா். இது குறித்து வடமேற்கு காவல் சரக துணை ஆணையா் பீஷாம் சிங் வியாழக்கிழமை கூறியதாவது... மேலும் பார்க்க