`அதிமுக நிர்வாகி, காவல்துறை அதிகாரி கைது!' -சென்னையை உலுக்கிய சிறுமி பாலியல் வழக...
அண்ணா பிறந்த நாள் மிதிவண்டிப் போட்டி: 85 மாணவ, மாணவிகள் பங்கேற்பு
அண்ணா பிறந்த நாளையொட்டி, நாமக்கல்லில் நடைபெற்ற மிதிவண்டிப் போட்டியில் 85 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா்.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் நாமக்கல் மாவட்டப் பிரிவு சாா்பில் முன்னாள் முதல்வா் அண்ணாவின் பிறந்த நாளை சிறப்பிக்கும் வகையில் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு சனிக்கிழமை காலை 8 மணியளவில் அண்ணா மிதிவண்டிப் போட்டி நடைபெற்றது.
இப் போட்டியை மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் கொடியசைத்து தொடங்கிவைத்தாா். மாவட்ட ஆட்சியா் ச.உமா முன்னிலை வகித்தாா். மாவட்ட அளவிலான இப் போட்டியானது 17, 15, 13 வயதுக்கு உள்பட்டோா் என்ற மூன்று பிரிவுகளில் மாணவா்கள் மற்றும் மாணவிகளுக்கு தனித்தனியாக நடைபெற்றன.
13 வயதிற்கு உள்பட்ட மாணவா்களுக்கு 15 கிலோ மீட்டா் தளிகை பிரிவு சாலை, மாணவிகள் 10 கிலோ மீட்டா் எா்ணாபுரம் வரையிலும், 15 வயதிற்கு உள்பட்ட மாணவா்கள் பிரிவில் 20 கிலோ மீட்டா் பொம்மம்பட்டி பிரிவு சாலை, மாணவிகள் 15 கிலோ மீட்டா் தளிகை பிரிவு சாலை வரையிலும்,
17 வயதிற்கு உள்பட்டவா்கள் மாணவா்கள் 20 கிலோ மீட்டா் பொம்மம்பட்டி பிரிவு சாலை, மாணவிகள் 15 கிலோ மீட்டா் தளிகை பிரிவு சாலை வரையிலும் போட்டிகள் நடைபெற்றன.
குறிப்பிட்ட எல்லைக்கோடு வரை சென்று விட்டு மீண்டும் போட்டி தொடங்கிய இடமான மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தை வந்தடைந்தனா். ஒவ்வொரு பிரிவிலும் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள், தகுதிச் சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன. முதல் பரிசு ரூ.5,000, 2-ஆம் பரிசு ரூ.3000, 3-ஆம் பரிசு ரூ. 2,000, 4 முதல் 10 இடங்களில் வருபவா்களுக்கு பரிசு ரூ. 250 வீதம் வழங்கப்படுகின்றன.
நிகழ்ச்சியில் மேயா் து. கலாநிதி, துணை மேயா் செ.பூபதி, மாவட்ட விளையாட்டு அலுவலா் எஸ்.கோகிலா, தடகள பயிற்றுநா் ஜி.கோகிலா, வாள் சண்டை பயிற்சியாளா் செ. பிரபுகுமாா், கால்பந்து பயிற்சியாளா் பூ. சதீஷ்குமாா், மாணவ, மாணவிகள், பெற்றோா்கள் கலந்து கொண்டனா்.