ஹைதராபாத்தில் ஒரே இரவில் 245.5 மிமீ மழை! வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட 3 பேர...
அண்ணா பிறந்த நாள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் மரியாதை!
பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாளையொட்டி சென்னையில் உள்ள அண்ணாவின் திருவுருவச் சிலைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாள் இன்று(செப். 15) தமிழகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.
இதையொட்டி, சென்னை வள்ளுவர் கோட்டம் அண்ணா பூங்காவில் உள்ள அண்ணாவின் திருவுருவச் சிலைக்குக் கீழ் உள்ள திருவுருவப் படத்திற்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து துணை முதல்வர், அமைச்சர்களும் மரியாதை செலுத்தினர்.
முன்னதாக முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில்,
"தமிழன்னை தந்திட்ட தலைமகன்!
திராவிட முன்னேற்றக் கழகம் எனும் நம் உயிரைத் தாயென அளித்திட்ட திருமகன், பேரறிஞர் அண்ணா தலைமகன் நிமிர்த்திய தமிழ்நாட்டைத் தலைகுனிய விடமாட்டோம்!" என்று குறிப்பிட்டிருந்தார்.
தமிழன்னை தந்திட்ட தலைமகன்!
— M.K.Stalin (@mkstalin) September 15, 2025
திராவிட முன்னேற்றக் கழகம் எனும் நம் உயிரைத் தாயென அளித்திட்ட திருமகன், பேரறிஞர் அண்ணா ♥
தலைமகன் நிமிர்த்திய தமிழ்நாட்டைத் தலைகுனிய விடமாட்டோம்!#ஓரணியில்தமிழ்நாடு#RememberingAnnapic.twitter.com/gIPWj2qnqv