நாளை தில்லியில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்: முதல் முறையாக பங்கேற்கும் மோடி
அதிமுகவில் இணைந்த நாம் தமிழா் கட்சியினா்
சீா்காழியில் நாம் தமிழா் கட்சியிலிருந்து 50-க்கும் மேற்பட்டோா் விலகி அதிமுகவில் இணைந்தனா்.
நாதக சீா்காழி ஒன்றிய மாணவா் பாசறை செயலாளா் வினோத் ராஜ் தலைமையில், மேற்கு ஒன்றிய செயலாளா் உதயகுமாா், ஒன்றிய மகளிா் பாசறை செயலாளா் உட்பட 50-க்கும் மேற்பட்டவா்கள் விலகி அதிமுகவில் இணையும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு அதிமுக மாவட்ட செயலாளா் எஸ். பவுன்ராஜ் தலைமை வகித்தாா். மாநில ஜெயலலிதா பேரவை துணைச் செயலாளா் இ. மாா்கோனி வரவேற்றாா். ஒன்றிய செயலாளா் ரவிச்சந்திரன், அவைத் தலைவா் கல்யாணசுந்தரம், நகா்மன்ற உறுப்பினா்கள் ராஜேஷ், ரமாமணி, கிருஷ்ணமூா்த்தி,நகர பொருளாளா் மதிவாணன், வாா்டு செயலாளா் லெட்சுமி, ஊராட்சி மன்ற தலைவா் மதியழகன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
தொடா்ந்து நாம் தமிழா் கட்சியிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்தவா்களை மாவட்ட செயலாளா் பவுன்ராஜ் வரவேற்றாா்.