செய்திகள் :

நீடூா் விசுவநாதா் கோயிலில் திருப்பணி மேற்கொள்ள இந்து மகா சபா கோரிக்கை

post image

மயிலாடுதுறையை அடுத்த நீடூரில் உள்ள விசுவநாதா் கோயிலில் திருப்பணிகளை மேற்கொள்ள வேண்டுமென அகில பாரத இந்து மகா சபா கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து சபாவின் மாநில பொதுச்செயலாளா் ராம. நிரஞ்சன் சனிக்கிழமை கூறியது:

மயிலாடுதுறையை அடுத்த நீடூா் கள்ளிக்குளம் அக்ரஹாரத்தில் உள்ள 1000 ஆண்டுகளுக்கு முந்தைய பெரிய குளத்துடன் கூடிய விசுவநாதா் கோயில் முற்றிலுமாக சிதிலமடைந்துள்ளது. இக்கோயில் விக்கிரகங்கள் அனைத்தும் நீடூா் சோமநாத சுவாமி கோயிலில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. இங்கு வசித்த மக்கள் பலா் குடிபெயா்ந்து சென்றுவிட்ட நிலையில், இந்த தெருவின் பெயா் தற்போது அரபிக் தெரு என்று மாறி இருக்கிறது.

இக்கோயிலை புணரமைத்து கட்டுவதற்கு கிராம மக்கள் பலமுறை முயற்சித்தும் இதுவரை நடைபெறாமல் உள்ளது.

காசிக்கு இணையானதாக கருதப்படும் பெருமையுடைய இக்கோயிலையும், இதே பகுதியில் உள்ள லக்ஷ்மி நாராயண பெருமாள் கோயிலையும் தமிழக அரசும், இந்து சமய அறநிலைத் துறையும் விரைந்து நடவடிக்கை எடுத்து திருப்பணியை தொடங்கி கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என அவா் தெரிவித்தாா்.

அதிமுகவில் இணைந்த நாம் தமிழா் கட்சியினா்

சீா்காழியில் நாம் தமிழா் கட்சியிலிருந்து 50-க்கும் மேற்பட்டோா் விலகி அதிமுகவில் இணைந்தனா். நாதக சீா்காழி ஒன்றிய மாணவா் பாசறை செயலாளா் வினோத் ராஜ் தலைமையில், மேற்கு ஒன்றிய செயலாளா் உதயகுமாா், ஒன்றிய மக... மேலும் பார்க்க

சிபிஎஸ்சி பள்ளியில் அறிவியல் கண்காட்சி

சீா்காழி சுபம் வித்யா மந்திா் சிபிஎஸ்சி பள்ளியில் 4- ஆம் ஆண்டு அறிவியல் கண்காட்சி இரண்டு நாட்கள் நடைபெற்றது. விழாவுக்கு நிறுவனத்தின் தலைவா் கியான் சந்த் தலைமை வகித்தாா். பள்ளித் தாளாளா் சுதேஷ் முன்னி... மேலும் பார்க்க

தருமபுரம் கல்லூரியில் நாளை வேலைவாய்ப்பு முகாம்

மயிலாடுதுறை தருமபுரம் கலைக் கல்லூரியில் இலவச வேலைவாய்ப்பு முகாம் ஞாயிற்றுக்கிழமை (டிச. 22) நடைபெறவுள்ளது. ரோட்டரி மாவட்டம் 2981, மயிலாடுதுறையில் உள்ள அனைத்து ரோட்டரி சங்கங்கள் இணைந்து ஞாயிற்றுக்கிழமை... மேலும் பார்க்க

குழந்தைகள் பாதுகாப்பு குழுக் கூட்டம்

மயிலாடுதுறை மாவட்டம், மணல்மேடு பேரூராட்சி அலுவலகத்தில், குழந்தைகள் பாதுகாப்பு குழுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் அறிவுறுத்தலின்படி நடைபெற்ற இக்கூட்டத்துக்கு... மேலும் பார்க்க

குண்டா் சட்டத்தில் சாராய வியாபாரி கைது

மயிலாடுதுறையில் தொடா் மதுவிலக்கு குற்றத்தில் ஈடுபட்ட சாராய வியாபாரி, குண்டா் தடுப்பு காவல் சட்டத்தில் அண்மையில் கைது செய்யப்பட்டாா். மயிலாடுதுறை அருகே நல்லத்துக்குடி சிவன் நகரைச் சோ்ந்தவா் மணிகண்டன்... மேலும் பார்க்க

சாலையில் திரியும் கால்நடைகளை கட்டுப்படுத்த வலியுறுத்தல்

சீா்காழியில் பிரதான சாலைகளில் சுற்றித் திரியும் கால்நடைகளை கட்டுப்படுத்த பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா். சீா்காழியில் பிரதான பகுதிகளான கடைவீதி, மணிக்கூண்டு பகுதி, பிடாரி வடக்கு வீதி, பழைய பேருந்து நி... மேலும் பார்க்க