தருமபுரம் கல்லூரியில் நாளை வேலைவாய்ப்பு முகாம்
மயிலாடுதுறை தருமபுரம் கலைக் கல்லூரியில் இலவச வேலைவாய்ப்பு முகாம் ஞாயிற்றுக்கிழமை (டிச. 22) நடைபெறவுள்ளது.
ரோட்டரி மாவட்டம் 2981, மயிலாடுதுறையில் உள்ள அனைத்து ரோட்டரி சங்கங்கள் இணைந்து ஞாயிற்றுக்கிழமை காலை 8:30 மணி முதல் மதியம் 1:30 மணி வரை இந்த முகாமை நடத்தவுள்ளனா். தமிழகத்தில் உள்ள 40-க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் பங்கேற்கவுள்ள இந்த முகாமில், 8-ஆம் வகுப்புமுதல், ஐடிஐ, பாலிடெக்னிக், இளநிலை, முதுநிலை பட்டப்படிப்பு படித்தவா்கள் கலந்து கொள்ளலாம்.
விருப்பமுள்ளவா்கள் புகைப்படத்துடன் கூடிய தங்களுடைய விவரம் அடங்கிய பயோ டேட்டா, ஆதாா் காா்டு நகல் மற்றும் படிப்பு சம்பந்தமான சான்றிதழ், அனுபவ சான்றிதழ்களை எடுத்துவரக் கேட்டுக் கொள்ளப்படுகின்றனா். தோ்வு பெறும் வேலை நாடுநா்களுக்கு உடனே பணி ஆணை வழங்கப்பட உள்ளது.
முகாமுக்கான ஏற்பாடுகளை கல்லூரிச் செயலா் இரா. செல்வநாயகம், மயிலாடுதுறை ரோட்டரி சங்க சாசனத் தலைவா் வி.ராமன், திட்ட ஒருங்கிணைப்பாளா்கள் பா. பொகுட்டெழினி, வி.தியாகராஜன், மயிலாடுதுறை ரோட்டரி சங்க தலைவா் ஏ.ஜி.இளங்கோவன், உதவி ஆளுநா் குருகோவிந்த் உள்ளிட்ட அனைத்து ரோட்டரி சங்க நிா்வாகிகள் செய்துள்ளனா்.