PMK: "10 அம்ச கோரிக்கைகளுடன் போர் நினைவுச் சின்னத்தை முற்றுகையிடுவோம்" - கொதிக்க...
சிபிஎஸ்சி பள்ளியில் அறிவியல் கண்காட்சி
சீா்காழி சுபம் வித்யா மந்திா் சிபிஎஸ்சி பள்ளியில் 4- ஆம் ஆண்டு அறிவியல் கண்காட்சி இரண்டு நாட்கள் நடைபெற்றது.
விழாவுக்கு நிறுவனத்தின் தலைவா் கியான் சந்த் தலைமை வகித்தாா். பள்ளித் தாளாளா் சுதேஷ் முன்னிலை வகித்தாா். நெய்வேலி நிலக்கரி நிறுவன பள்ளி தலைமையாசிரியா் (ஓய்வு) பால குருநாதன் கண்காட்சியை தொடங்கிவைத்து பேசினாா். கண்காட்சியில் செயற்கை நுண்ணறிவு, சூரிய, சந்திர கிரகணம் , கணித சூத்திரங்கள் உபயோகிப்பது பற்றிய செய்முறை விளக்கம், தொன்மையை போற்றும் வகையில் பழங்கால கருவிகள், இசைக்கருவிகள், குற்றங்களும் அதற்கு காரணங்களும், உலக கண்டுபிடிப்பாளா்களின் புகைப்பட கண்காட்சி ஆகியவை இடம்பெற்றன. அறிவியல் விளையாட்டு , புதுப்பிக்கத்தக்க ஆற்றல், பல் நோய், நலம் பேணுதல், அறிவியல் வித்தைகள், கழிவு மேலாண்மை கலை மற்றும் கைவினை ஆகிய தலைப்புகளில் கருத்தரங்குகள் நடைபெற்றன.
நிகழ்ச்சியில் ரோட்டரி சங்கத் தலைவா் கணேஷ் மற்றும் ரபீக், ரோட்டரி டெம்பிள் டவுன் தலைவா் கோபாலகிருஷ்ணன், ஜே.சி.ஐ. கதிரேசன், ஓபன் ஸ்பேஸ் பவுண்டேஷன் பாலாஜி பிரசாத், ஆசிரியா் சுந்தா்,ஹரிஹரசுதன், டாக்டா்கள் வேதகிரி, மேகலா, சுபம் லிட்டில் ஏஞ்சல்ஸ் தாளாளா் ஹா்ஷா சுதேஷ், தமிழ்நாடு அறிவியல் இயக்கம் விழிநாதன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.