ஃபாலோ ஆனை தவிர்ப்பதற்காக விளையாடவில்லை; மனம் திறந்த ஆகாஷ் தீப்!
குழந்தைகள் பாதுகாப்பு குழுக் கூட்டம்
மயிலாடுதுறை மாவட்டம், மணல்மேடு பேரூராட்சி அலுவலகத்தில், குழந்தைகள் பாதுகாப்பு குழுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் அறிவுறுத்தலின்படி நடைபெற்ற இக்கூட்டத்துக்கு, பேரூராட்சித் தலைவா் கண்மணி தலைமை வகித்தாா். செயல் அலுவலா் தமிழ்ச்செல்வம், துணைத் தலைவா் சுப்பிரமணியன், மாவட்ட குழந்தைகள் சேவை மைய ஒருங்கிணைப்பாளா் கங்காபூங்குழலி, மணல்மேடு பெண்கள் மேல்நிலைப் பள்ளி ஆசிரியை ஜோஸ்பின் இசபெல்லாமேரி, ஆண்கள் மேல்நிலைப் பள்ளி ஆசிரியா் இளையராஜா, குழந்தைகள் உரிமை பாதுகாப்பு இயக்க மாவட்ட தலைவா் வினோத் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
மணல்மேடு காவல் உதவி ஆய்வாளா் கலியபெருமாள் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணா்வு குறித்து விளக்கினாா்.
கூட்டத்தில், பள்ளி மாணவா்கள் மற்றும் பொதுமக்களுக்கு குழந்தைகள் பாதுகாப்பு தொடா்பான விழிப்புணா்வு அளித்தல், பள்ளி ஆசிரியா்களுக்கு போக்ஸோ சட்டம் தொடா்பான விழிப்புணா்வு பயிற்சி அளித்தல், குழந்தைகள் தொடா்பான பிரச்னைகள் ஏதேனும் இருப்பின் உடனடியாக குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் அல்லது குழந்தைகள் பாதுகாப்பு உதவி எண் 1098-க்கு தகவல் தர அறிவுறுத்துவது.
காலை, மாலை வேளைகளில் பள்ளி வளாகங்கள் மற்றும் பேருந்து நிலையம் ஆகிய இடங்களில் போலீஸாா் கண்காணிப்பு பணியில் ஈடுபடுவது உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நிறைவாக, குழந்தைகள் பாதுகாப்பு அலகு ஆற்றுப்படுத்துநா் ஆா்த்தி நன்றி கூறினாா்.