செய்திகள் :

அதிமுக இபிஎஸ் கட்டுப்பாட்டில் இருக்கிறதா? அமைச்சர் ரகுபதி கேள்வி

post image

அதிமுக இபிஎஸ் கட்டுப்பாட்டில் இருக்கிறதா? என்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னை தேனாம்பேட்டை அண்ணா அறிவாலயத்தில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது:

” ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக கூட்டணி 1 லட்சத்து 15 ஆயிரத்து 709 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றுள்ளது. திமுகவின் நான்கு ஆண்டுக்கால ஆட்சியில் ஆட்சிக்கு எதிரான அலை இல்லை, ஆதரவு அலைதான் வீசுகிறது என்று இதன் மூலம் தெரிந்துகொள்ள முடிகிறது.

2024 நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக 34 ஆயிரத்து 817 வாக்குளைப் பெற்றது. அந்த வாக்குகள் அனைத்தும் திமுகவுக்கு கிடைத்திருக்கிறது. அதிமுக தொண்டர்களும் இன்றைக்கு திராவிட இயக்கத்தை நிலைநிறுத்த கூடிய ஆட்சி தலைவர் தளபதினுடைய ஆட்சி என்பதை உணர்ந்து திமுகவிற்கு வாக்களித்துள்ளனர். எப்போதும் வேறு யாருக்கும் ஓட்டு போடாத மாற்றுக்கட்சிக்காரர்கள்கூட திமுகவிற்கு வாக்களித்திருக்கிறார்கள். அந்த வாக்குகள் அனைத்தும் திமுக கூட்டணிக்கு கிடைத்திருக்கிறது.

எடப்பாடி பழனிச்சாமி பொதுச்செயலாளராகப் பொறுப்பேற்ற பிறகு 11 முறை தோல்வி அடைந்திருக்கிறார். தொடர் தோல்வி அடைந்த ஒரு அரசியல் தலைவர் அவராகத்தான் இருக்க முடியும். இதிலிருந்து அதிமுகவை வெற்றிப்பாதையில் அழைத்துச் செல்வதற்கு அவருக்கு எந்தவிதமான தகுதியும் இல்லை என்பது நிரூபணம் ஆகி உள்ளது. அங்கு இருக்கக்கூடிய தலைவர்கள் எல்லாமே வெறுப்போடு இருக்கிறார்கள்.

பழனிசாமி, பாஜக கொண்டு வரும் திட்டங்களை மறைமுகமாக ஆதரிப்பார், வெளியில் பாஜகவை எதிர்பதுபோல நடிப்பார்.

ஈரோடு கிழக்கு தேர்தலில் முதல்வரின் திட்டங்களுக்கு கிடைத்த வெற்றியாக பார்க்கப்படுகிறது. எங்களின் திட்டங்களை பார்த்து திமுகவுக்கு வாக்களித்துள்ளார்கள் என்றால், மக்கள் திராவிட மாடல் ஆட்சியை வரவேற்கிறார்கள் என அர்த்தம்.

திமுக அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளால் அத்திக்கடவு அவிநாசி திட்டம் முழுமையாக முற்றுப்பெற்றிருக்கிறது. எடப்பாடி பழனிசாமிக்கு எந்த பயமும் கிடையாது என்பது தவறு, கட்சி அவரது கட்டுப்பாட்டில் இருக்கிறதா என்பது அவரின் முன்னாள் அமைச்சர்களின் பேச்சுகள் எடுத்துக்காட்டாக உள்ளது. கட்டுப்பாட்டில் கட்சியை கொண்டு வருவதற்கு படாத பாடு பட்டு கொண்டிருக்கிறார்.

சீமான் மீது அவதூறு வழக்குகள் பதிவு செய்துவிட்டு நீதிமன்றத்திற்கு சென்று அங்கே வழக்கு தொடர்ந்து கொள்ளலாம். கைது பண்ண வேண்டும் என்பது கட்டாயம் அல்ல, கைது செய்யலாம் செய்யாமலும் விட்டுவிடலாம்.

இதையும் படிக்க: பொங்கல் தொகுப்பில் ஊழல்: அமைச்சர் காந்தி பதவி விலக வேண்டும்! - அண்ணாமலை

நீதிமன்றத்தில் ஆஜரானவர்கள் குற்றவாளி அல்ல, அவதூறாகப் பேசவில்லை என்பதை நிரூபித்தாக வேண்டும். அவர் அவதூறாகப் பேசினார் என்பது வழக்கு பதிந்து இருக்கும்போது அவர் நீதிமன்றத்திற்கு வந்ததாக வேண்டும். கைது செய்யவேண்டும் என்றால், எத்தனை முறை வேண்டுமானாலும் அவரை கைது செய்யப்பட முடியும். எல்லா ஊர்களிலும் அவர் மீது புகார் கொடுக்கும் போது மொத்தத்தில் புகார்களாக அப்படியாக உள்ளது. புகார் மீது விசாரணை நடத்தி குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்து அதன் மீது வழக்கு நடத்தப்படும். நீதிமன்றம் அதை பார்த்துக் கொள்ளும்.

இந்து முஸ்லீம் ஒன்றாகதான் தமிழகத்தில் உள்ளனர். புதிதாக மத கலவரத்தை உருவாக்க யாரும் நினைத்தாலும் அதற்கு இடம் கொடுக்க மாட்டோம். நாங்கள் அனைவரையும் சமமாக பார்க்கிறோம். யாரும் யாரையும் ஏமாற்றி விட முடியாது. அந்த பிரச்னையை எவ்வாறு சுமூகமாகத் தீர்க்க வேண்டும் என முதலமைச்சருக்கு தெரியும். முதலமைச்சர் அதனை சுமூகமாக தீர்ப்பார்.

பெண்களுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதல் இடத்தில் உள்ளது என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றம்சாட்டு பொய்யானது; போலியானது. திமுக ஆட்சியில் பெண்களுக்கு தைரியம் வந்துள்ளது, தங்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளை நீதிமன்றத்திலோ காவல் நிலையத்திலோ புகார் கொடுத்தால் உரிய நடவடிக்கை எடுக்கக்கூடிய காலம் இதுதான் என்பதை உணர்ந்து பெண்கள் புகார் கொடுக்க முன் வந்திருக்கிறார்கள்.

பொள்ளாச்சி சம்பவங்கள் 14 நாள் காத்திருந்து அப்போதுகூட முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யவில்லை, பெண்கள் அச்சப்பட்டார்கள். பெண்கள் வெளியே வந்து புகார் கொடுக்க தயங்கினார்கள்.” என்று பேசினார்.

சுழல் - 2 வெப் தொடரின் வெளியீட்டுத் தேதி!

சுழல் - 2 வெப் தொடரின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.கதிர், ஐஸ்வர்யா ராஜேஷ், பார்த்திபன், ஷ்ரேயா ரெட்டி நடிப்பில் பிரம்மா, அனுசரண் இயக்கத்தில் உருவான வெப் தொடர் சுழல். இத்தொடரை புஷ்கர் - காயத... மேலும் பார்க்க

ஒரேநாளில் ரூ. 237.98 கோடி வருவாய்! - பத்திரப் பதிவுத் துறை தகவல்

முகூர்த்த நாளான நேற்று(பிப். 10) ஒரேநாளில் ரூ.237.98 கோடி வருவாய் ஈட்டியுள்ளதாக பத்திரப்பதிவுத் துறை தகவல் தெரிவித்துள்ளது. ஆவணங்கள் அதிகமாக பதிவு செய்யப்படுவதால் பத்திரப்பதிவுத் துறை அலுவலகங்களில் மு... மேலும் பார்க்க

ராகுல் இன்று சென்னை வருகை! பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்!

காங்கிரஸ் தலைவரும் மக்களவை உறுப்பினருமான ராகுல் காந்தி இன்று(பிப். 11) சென்னை வரவுள்ள நிலையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் பார்க்க

ஐஐடி முனைவர் படிப்பில் 560 ஓ.பி.சி., எஸ்.சி., எஸ்.டி. இடங்கள் பறிப்பு!

ஐ.ஐ.டி.க்களில் இடஒதுக்கீட்டை முறையாக நடைமுறை படுத்தப்படாததால் முனைவர் படிப்பில் 560 ஓ.பி.சி, எஸ்.சி, எஸ்.டி மாணவர் இடங்கள் பறிக்கப்பட்டுள்ளதாக மதுரை மக்களவை உறுப்பினர் சு. வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.... மேலும் பார்க்க

ஆதாரமற்ற செய்திகளை அண்ணாமலை வெளியிடுகிறார்: அமைச்சர் காந்தி

ஆதாரமற்ற செய்திகளை அண்ணாமலை வெளியிடுகிறார் என்று அமைச்சர் ஆர். காந்தி தெரிவித்துள்ளார்.தமிழ்நாடு பா.ஜ.க. மாநில தலைவர் கே. அண்ணாமலை, வேட்டி சேலை வழங்கும் திட்டம் குறித்து நேற்று(பிப். 10) வெளியிட்ட அறி... மேலும் பார்க்க

தில்லி முதல்வராக பெண் அல்லது பட்டியலினத்தவர் தேர்வாக வாய்ப்பு!

தில்லி முதல்வராக பெண் அல்லது பட்டியலினத்தவர் தேர்வாக வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது.70 உறுப்பினா்களைக் கொண்ட தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக 48 தொகுதிகளில் வெற்றிப்பெற்று ஆட்சியமைக்கத் தகுதி பெற... மேலும் பார்க்க