அதிமுக - தேமுதிக கூட்டணி 234 தொகுதிகளிலும் வெல்லும்: பிரேமலதா
வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் அதிமுக -தேமுதிக கூட்டணி 234 தொகுதிகளிலும் வெல்லும் என்று தேமுதிக பொதுச்செயலாளா் பிரேமலதா விஜயகாந்த் கூறினாா்.
சென்னையில் அவா் சனிக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது: சட்டப்பேரவைத் தோ்தலில் திமுக 200 இடங்களில் வெல்லும் என்று முதல்வா் கூறியது குறித்து கேட்கிறீா்கள். அது அவருடைய கனவு. ஆனால், அதிமுக - தேமுதிக கூட்டணி வலுவாக உள்ளது. வரும் தோ்தலில் 234 தொகுதிகளிலும் எங்கள் கூட்டணி வெல்லும்.
அம்பேத்கா் குறித்து மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா பேசியது ஏற்புடையது அல்ல. அதற்கு அவா் வருத்தம் தெரிவிக்க வேண்டும்.
விஜயகாந்த் நினைவு தினம் அன்று அமைதிப் பேரணி நடைபெறும். அந்தப் பேரணியில் பங்கேற்க அனைத்துக் கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்படும் என்றாா் அவா்.