லஷ்கர்-இ-தய்பாவின் சேதமடைந்த வசிப்பிடங்களில் சீரமைப்பு பணிகள்: பாகிஸ்தான் அரசு த...
அதிரடியாகக் குறைந்த தங்கம் விலை!
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வியாழக்கிழமை (மே. 15) பவுனுக்கு ரூ. 1,560 குறைந்து ரூ.68,880-க்கும் விற்பனையாகிறது.
கடந்த சில நாள்களாக ஆபரணத் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கமாக இருந்து வந்தது. செவ்வாய்க்கிழமை பவுனுக்கு ரூ. 840 உயா்ந்து ரூ. 70,840-க்கு விற்பனையான நிலையில், புதன்கிழமை கிராமுக்கு ரூ. 50 குறைந்து ரூ. 8,805-க்கும், பவுனுக்கு ரூ. 400 குறைந்து ரூ. 70,440-க்கும் விற்பனையானது.
போலீஸாரை சுட்டுவிட்டு தப்ப முயன்ற ரௌடியை சுட்டுப் பிடித்த போலீஸார்!
இந்த நிலையில், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வியாழக்கிழமை (மே. 15) ஒரே நாளில் அதிரடியாக கிராமுக்கு ரூ. 195 குறைந்து ரூ.8,610-க்கும், பவுனுக்கு ரூ. 1,560 குறைந்து ரூ.68,880-க்கும் விற்பனையாகிறது.
அதேபோல 18 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.160 குறைந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.7,095-க்கும், பவுனுக்கு ரூ.1,280 குறைந்து ரூ.56,760-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை நிலவரம்
அதேபோல வெள்ளி விலையும் கிராமும் ரூ.1 குறைந்து ரூ.108-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ.1000 குறைந்து ரூ. 1,08,000-க்கும் விற்பனையாகிறது.