அதிரடியாக சதமடித்த ஸ்டீவ் ஸ்மித்..! பிபிஎல் தொடரில் புதிய சாதனை!
பிபிஎல் (பிக் பேஷ் லீக்) டி20 தொடரில் களமிறங்கிய ஸ்டீவ் ஸ்மித் அதிரடியாக சதமடித்து புதிய சாதனை நிகழ்த்தியுள்ளார்.
பார்டர் -கவாஸ்கர் தொடர் வெற்றிக்குப் பிறகு சிட்னி சிக்ஸர் அணிக்காக ஸ்டீவ் ஸ்மித் பிபிஎல் டி20 தொடரில் விளையாடுகிறார்.
இந்தப் போட்டியில் ஸ்டீவ் ஸ்மித் 64 பந்துகளில் 121 ரன்கள் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
சிட்னி சிக்ஸர்ஸ் அணியின் கேப்டன் ஹெண்டிரிக்ஸ் 46 ரன்கள் அடித்தார். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 222/3 ரன்கள் குவித்துள்ளது.
பெர்த் ஸ்கார்சஸ் சார்பில் கூப்பர் கோன்னஹ்லி, அஸ்டன் ஏகர், ஜேசன் பெஹரண்ட்ராஃப் தலா 1 விக்கெட் எடுத்தார்கள்.
பிபிஎல் தொடரில் அதிக சதம் அடித்தவர்கள் (3 சதங்கள்) பட்டியலில் ஸ்டீவ் ஸ்மித் பென் மெக்டொர்மெட் (96 இன்னிங்ஸில்) உடன் சமன் செய்துள்ளார்.
ஆனால், மிகவும் குறைந்த இன்னிங்ஸில் (32) ஸ்டீவ் ஸ்மித் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.