"செந்தில் பாலாஜி அமைச்சராக தொடர்வேன் எனச் சொன்னால்..!" - உச்ச நீதிமன்றம் சொன்னதெ...
அதிவேக 16,000 ரன்கள்..! சச்சினின் சாதனையை முறியடித்த கோலி!
அதிவேகமாக 16,000 ரன்கள் குவித்து விராட் கோலி புதிய சாதனை ஒன்றைப் படைத்துள்ளார்.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. முதல் இரண்டு போட்டிகளில் தோல்வியைத் தழுவிய இங்கிலாந்து அணி தொடரையும் இழந்தது. இந்த நிலையில், அகமதாபாத்தில் நடைபெற்றுவரும் மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பவுலிங்கை தேர்வு செய்து விளையாடியது.
இந்தத் தொடரின் 2-வது ஒருநாள் போட்டியில் 6 ரன்களில் ஆட்டமிழந்த விராட் கோலி, 3-வது போட்டியில் அதிரடியாக விளையாடி 52 ரன்கள் குவித்து அடில் ரஷீத் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
இதையும் படிக்க... அதிவேக 2,500..! ஷுப்மன் கில் புதிய சாதனை!
இந்தப் போட்டியில் அரைசதம் விளாசியதன் மூலம் ஆசிய கிரிக்கெட் வீரர்களில் அதிவேகமாக 16000 ரன்களை எட்டிய முதல் வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார். இந்த சாதனையை எட்டுவதற்கு அவர் 340 இன்னிங்ஸ்களை எடுத்துக்கொண்டுள்ளார்.
அவருக்கு அடுத்தபடியாக சச்சின் டெண்டுல்கர்(353 இன்னிங்ஸ்), குமார் சங்ககரா(360 இன்னிங்ஸ்), மஹேலா ஜெயவர்த்தனே (401 இன்னிங்ஸ்) எட்டியுள்ளனர். மேலும், இங்கிலாந்துக்கு எதிராக 4000 ரன்களை எட்டிய முதல் வீரர் என்ற சாதனையையும் விராட் கோலி படைத்துள்ளார்.
இவர் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகளுக்கு எதிராகவும் 4000 ரன்களை குவித்துள்ளார். இந்தியர்களில் சச்சின் டெண்டுல்கருக்கு(3990 ரன்கள்) அடுத்தபடியாக அதிக ரன்கள் குவித்தவர் என்ற சாதனையும் தன்வசமாக்கியுள்ளார் விராட் கோலி.
இதையும் படிக்க... சாம்பியன்ஸ் லீக்கில் சாதனை படைத்த எர்லிங் ஹாலண்ட்..!
ஆசியாவில் அதிக ரன்கள் விளாசியவர்கள்
21741 ரன்கள்- சச்சின் டெண்டுல்கர்
18423 ரன்கள்- குமார் சங்ககரா
17386 ரன்கள்- ஜெயவர்த்தனே
16000 ரன்கள்- விராட் கோலி*
13757 ரன்கள்- சனத் ஜெயசூரியா
13497 ரன்கள்- ராகுல் டிராவிட்