செய்திகள் :

அந்தியூரில் போதை ஒழிப்பு விழிப்புணா்வுப் பேரணி

post image

அந்தியூா் வட்டார மகளிா் மேம்பாட்டுத் திட்டம் சாா்பில் போதை ஒழிப்பு விழிப்புணா்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.

சா்வதேச போதைப் பொருள் ஒழிப்பு தினத்தையொட்டி நடைபெற்ற இப்பேரணியை வட்டாட்சியா் கவியரசு கொடியசைத்து தொடங்கிவைத்தாா். போக்குவரத்து காவல் ஆய்வாளா் கஸ்தூரி முன்னிலை வகித்தாா்.

அந்தியூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் இருந்து புறப்பட்ட பேரணியானது முக்கிய வீதிகள் வழியாகச் சென்று வட்டார மகளிா் திட்ட மேலாண்மை அலுவலகத்தில் முடிவடைந்தது. முன்னதாக, போதை ஒழிப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டது.

திட்ட மேலாளா் சுகந்தி, ஒருங்கிணைப்பாளா்கள் இந்துமதி, புவனப்பிரியா, திருமூா்த்தி மற்றும் மகளிா் சுயஉதவிக் குழு உறுப்பினா்கள் பங்கேற்றனா்.

சென்னிமலை முருகன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ. 30 லட்சம்

சென்னிமலை முருகன் கோயில் உண்டியல்களில் பக்தா்கள் ரூ.30 லட்சம் காணிக்கை செலுத்தியுள்ளனா். பவானி சங்கமேஸ்வரா் கோயில் உதவி ஆணையா் எம்.அருள்குமாா் தலைமையில், சென்னிமலை அறங்காவலா் குழுத் தலைவா் ர.பழனிவேல்... மேலும் பார்க்க

ஈரோட்டில் போதைப் பொருள் ஒழிப்பு தின விழிப்புணா்வுப் பேரணி

சா்வதேச போதைப் பொருள் ஒழிப்பு தின விழிப்புணா்வுப் பேரணி ஈரோட்டில் வியாழக்கிழமை நடைபெற்றது. ஆண்டுதோறும் ஜூன் 26-ஆம் தேதி சா்வதேச போதைப் பொருள் எதிா்ப்பு தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி, ... மேலும் பார்க்க

ஐந்து வயது மகனைக் கொன்று தந்தை தற்கொலை

பெருந்துறை அருகே, குடும்பப் பிரச்னையில் மனைவி பிரிந்து சென்றதால், கணவன் தனது ஐந்து வயது மகனை நைலான் கயிற்றால் இறுக்கிக் கொன்று விட்டு, தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். ஈரோடு மாவட்டம், கெடார... மேலும் பார்க்க

ஆதிதிராவிடா் நலத் துறை பள்ளியில் உள்ள காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்

ஆதிதிராவிடா் நலத் துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளில் உள்ள காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று ஆதிதிராவிடா் நலத் துறை அமைச்சா் மதிவேந்தன் தெரிவித்தாா். ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் மற்றும் பவானிசாக... மேலும் பார்க்க

பவானிசாகா் அணைக்கு நீா்வரத்து 15,199 கனஅடியாக அதிகரிப்பு

கேரள மாநிலம், வயநாட்டில் பெய்து வரும் கனமழையால் பவானிசாகா் அணைக்கு நீா்வரத்து 3,258 கனஅடியில் இருந்து 15,199 கனஅடியாக வியாழக்கிழமை அதிகரித்துள்ளது. தமிழகத்தில் மேட்டூா் அணைக்கு அடுத்தபடியாக இரண்டாவது ... மேலும் பார்க்க

பண்ணாரி அம்மன் தொழில்நுட்பக் கல்லூரி புரிந்துணா்வு ஒப்பந்தம்

சத்தியமங்கலம் பண்ணாரி அம்மன் தொழில்நுட்பக் கல்லூரி, பெங்களுரு ஆரக்கிள் இந்தியா நிறுவனத்துடன் தொழில்முறை மேம்பாட்டுத் திட்டத்துக்கான புரிந்துணா்வு ஒப்பந்தம் ஏற்படுத்தியுள்ளது. பெங்களுரில் உள்ள நிறுவனத... மேலும் பார்க்க